"நாராயணா".. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஒரு இடி.. ஸ்டாலினுக்கு ஒரு இடி.. ஒரே நாளில் திணறடித்த கமலாலயம்

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈவிகேஎஸ்ஸை கலாய்த்து, பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?

ஒருபக்கம் அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. அந்த கட்சி யார் கையில் போக போகிறது என்று தெரியாத நிலைமை உள்ளது..

மறுபக்கம், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு, இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.. நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.. இதனால், தமிழக மற்றும் தேசிய அரசியலே டென்ஷனாக காணப்படுகிறது.

 நாராயணன் ட்வீட்

நாராயணன் ட்வீட்

ஆனால், தமிழக பாஜகவோ, திமுகவை கேப் விடாமல் விமர்சித்து கொண்டிருக்கிறது.. அதிலும் பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, அறிக்கைகள் மூலம், திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கொண்டும், ட்விட்டர் பதிவுகள் மூலம் திணறடித்துக் கொண்டும் வருகிறார்.. இன்றும் 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. ஒன்று திமுகவுக்கு.. இன்னொன்று அதன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு..!

 டிரஸ்கள் கிழிந்தன

டிரஸ்கள் கிழிந்தன

என்ன காரணம்? நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது விசாரணை சூடுபிடித்துள்ளது.. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரான நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்... காங்கிரஸ் தலைவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இவர்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.. தன்னுடைய ஆடையை கிழித்துவிட்டதாக ஜோதிமணி எம்பி புகார் மனு அளித்துள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

 ஈவிகேஎஸ் பேட்டி

ஈவிகேஎஸ் பேட்டி

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில், தமிழக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் பேசும்போது, "காங்கிரஸ்காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும், ஆயுதம் ஏந்தவும் தெரியும்.. மகாத்மா காந்தி மட்டுமல்ல.. நேதாஜியும் எங்கள் தலைவர் தான்.. நாங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தால் தான் மோடி பிரதமராகி என்று ஆட்டம் போட முடிகிறது.. ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.. பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மாவால் எழுந்த எதிர்ப்பை திசை திருப்பவே இந்த விசாரணை என்று பேசியிருந்தார்.

ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ்

வழக்கம்போல, ஈவிகேஎஸ் பேசிய இந்த பேச்சும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.. இதற்குதான் நாராயணன், கமெண்ட் அடித்து ட்வீட் போட்டுள்ளார்.. அதில், ராகுலை 10 மணி நேம் விசாரிப்பது கண்டிக்கத்தது என்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்ன? 2,000 கோடி சொத்து முறைகேடு வழக்கு விசாரணை 10 மணி நேரம்தானா? நானும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கிண்டலடித்துள்ளார். அத்துடன் இன்னொரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

 நக்கல் - கிண்டல் ட்வீட்

நக்கல் - கிண்டல் ட்வீட்

அதில், "திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்தை நிறைவேற்றி இருக்கிறோம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வீட்டுக்கு அல்ல, நாட்டுக்கு?" என்று பதிவிட்டுள்ளார்.. கடந்த சில நாட்களாகவே, பாஜகவுக்கு திமுக தரப்பு பதிலடி தந்து கொண்டிருக்கிறது.. இருந்தாலும், பாஜக, டேக் ஆப் ஆகி வேகம் எடுத்து வருகிறது.. இன்றைய தினம் நாராயணன் போட்ட இந்த நக்கல் ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் திரண்டு வந்து நாராயணனுக்கு பதில் சொல்லிக் கொண்டும், ஆதரவு தெரிவித்து கொண்டும், கேள்வி கேட்டுக் கொண்டும், எதிர்ப்பு காட்டி கொண்டும் இருக்கிறார்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+