ஐசியூ சிகிச்சை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்.. என்ன பிரச்சனை? மருத்துவமனை விளக்கம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் இதய பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஐசியூவில் சிகிச்சை பெறும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக உள்ளார் எனவும், அவருக்கான பிரச்சனை என்ன? என்பது பற்றியும் மருத்துவமனை நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவரது மகன் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் வென்ற ஈவிகேஎஸ்
தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். பிப்ரவரி 27ல் தேர்தல் நடந்தது. மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாத்தில் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை தோற்கடித்தார்.

திடீர் உடல்நலக்குறைவு
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மேலிட தலைவர்களை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்று கடந்த 15ம் தேதி விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஐசியூவில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

மருத்துவமனை அறிக்கை
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதயபாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை சார்பில் அவ்வப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி இன்று மருத்துவனை சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

அறிக்கையில் இருப்பது என்ன?
அந்த அறிக்கையில், ‛‛ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயபாதிப்பு மற்றும் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஐசியூவில் சிகிச்சையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் இதயபாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்புகளில் இருந்து உடல்நலம் தேறிவருகிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவனும் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் மருத்துவமனை வழங்கிய உடையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். அதில் அவர் பேசுகையில், ‛‛நான் நல்லா இருக்கேன்.. சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்'' என தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அதற்கு பிறகு அவரது உடல்நலம் மோசமான நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது அவர் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications