"கமலாலயம்".. பதற வைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. மோடி பிளானே இதுதான்.. "தலை"க்கு வாயும் நாக்கும் அதிகமாம்
பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: முதலில் இந்த பாஜகவை, தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும், இதுதான் நமக்கு முதல் வேலை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.. நீட் தேர்வு மசோதாவை கிடப்பில் போட்டது முதல், தமிழக நலனுக்கு எதிராகவே ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன..
குறிப்பாக, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதை வெளிப்படையாகவே தெரிவித்து, ஆளுநரின் போக்கை கண்டித்தும் வருகின்றன.

ஆளுநர் ரவி
அந்த வகையில், காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருமுறை பேசும்போது, "தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் பழைய தலைவர்களை கேட்டு பாருங்க.. தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்... தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார்... தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி.. இந்த ரவிக்கு வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறியிருந்தார்.. இளங்கோவனின் இந்த பேச்சு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இன்றைய தினம் பாஜகவின் தலைவர் அண்ணாமலையை சீண்டி பேசியுள்ளார்.. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது... அப்போது நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசியதாவது:

ஜெயலலிதா
பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்திய துணை கண்டம் இல்லாமலேயே காணாமல் போய்விடும். நாட்டு மக்களும் நிம்மதியை இழக்கநேரிடும்.. முதலில் பாஜகவை ஒழிக்க வேண்டும்... நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதில் மற்றவர்களைவிட நமக்கு கடமை அதிகமாக இருக்கிறது.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மோடி, அமிஷ்தாவின் தலையீடு இருந்து வருகிறது..

வாயும் - நாக்கும்
அதிமுகவில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் பாஜகவினர்தான் .. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது.. ஒன்றை தலைமையாக இருந்தாலும் சரி, இரட்டை தலைமையாக இருந்தாலும் சரி, மூன்றாம் தலைமையாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவின் கைபாவையாக தான் இருப்பார்கள்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாயும், நாக்கும் அதிகம்... பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
எப்படியாவது எதிர்கட்சியாக வரவேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது... அதனால்தான், தமிழகத்தில் உள்ள அனைத்து ரவுடிகளையும் பாஜகவில் சேர்த்திருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் முடிந்தபிறகு, பாஜகவை தமிழகத்தில் வளரவே விடக்கூடாது... தமிழகத்தைவிட்டு துரத்த வேண்டும் இதுதான் நமக்கு முதல் வேலை..

ஆர்எஸ்எஸ்
ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மையமாக கொண்டு வரவேண்டும் என்று தான் இந்தியாவில் புதிதாக அக்னிபத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள்... நாட்டை காவிமயமாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடக்கிறது... 4 வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து இளைஞர்களை ஆர்எஸ்எஸ் பக்கம் மாற்றவேண்டும் என்று மோடி முயற்சி செய்கிறார்" என்றார் இளங்கோவன்.. ஏற்கனவே இளங்கோவனின் பேச்சால் கடுப்பாகி இருந்த பாஜகவினர், இன்றைய பேச்சால் மேலும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்..!
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications