சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமண விருந்தில் அதிமுக ஜெயகுமாரின் சாதுர்யம்.. மாஸ்க்கை எங்க வச்சிருக்காரு பாருங்க.. வேற லெவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஒரு திருமண வீட்டிற்கு சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்த ஒரு செயல் அனைவருக்கும் விழிப்புணர்வையும் முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளது.

Recommended Video

    திருமண விருந்தில் அதிமுக ஜெயகுமாரின் சாதுர்யம்.. மாஸ்க்கை எங்க வச்சிருக்காரு பாருங்க.. வேற லெவல்

    கொரோனா பரவும் சூழலில் தற்போது எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்றே சொல்ல முடியாததால் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ளவே பாடுபடுகிறார்கள். ஏனெனில் அந்த வைரஸின் பரவும் தன்மை அப்படியிருக்கிறது.!

    அதிலும் பொது இடங்களில் கவனக்குறைவு ஏற்பட்டால் ஒருவர் செய்யும் தவறால் அங்குள்ள அனைவருக்குமே பாதிப்பு என்பதால் பொது இடங்களில் மிகவும் புத்திசாலித்தனமாகவும் மற்றவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நாம் நடந்து கொள்வது மிக அவசியம்.

    கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் அரசியல் சாசனத்துக்கு மேலானவர்களா? என்ன சொல்கிறது அகண்டா சினிமா? கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் அரசியல் சாசனத்துக்கு மேலானவர்களா? என்ன சொல்கிறது அகண்டா சினிமா?

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இவர் ராயபுரம் தொகுதியின் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளரிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    உரிமைக் குரல்

    உரிமைக் குரல்

    பழகுவதற்கு மிக எளிமையானவர் என்பதால் அவரை கட்சியினர், அப்பகுதி மக்கள் தங்களில் ஒருவராகவே பாவிக்கிறார்கள். இதனால் எந்த எளிய தொண்டனின் திருமணமானாலும் அங்கு சென்று மணமக்களை வாழ்த்துவார்.

    மாஸ்க்

    மாஸ்க்

    அவ்வாறு வேளச்சேரியில் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஜெயக்குமாரை அங்கிருந்தவர்கள் உணவு அருந்த அழைத்து சென்றனர். அப்போது அவர் மணமக்களுடன் உணவு அருந்த அமர்ந்தார். பந்தியில் இலை வைத்து உணவு பொருட்கள் பறிமாறப்பட்டது.

    மாஸ்க்கை எங்கே வைப்பது என தவித்த முன்னாள் அமைச்சர்

    மாஸ்க்கை எங்கே வைப்பது என தவித்த முன்னாள் அமைச்சர்

    அவர் உணவு அருந்த மாஸ்கை கழற்றிய போது வேட்டி அணிந்து வந்ததால் பாக்கெட்டில் வைக்க முடியாமல் சற்று நேரம் தவித்தார். பயன்படுத்திய மாஸ்க்கை உணவு அருந்தும் டேபிளிலும் வைக்கக் கூடாது. இப்படியே பரபரப்பாக அங்கேயும் இங்கேயும் பார்த்தவர், உடனடியாக தனது சட்டை பட்டனில் மாஸ்க்கை மாட்டி தொங்கவிட்டார். இதையடுத்து அவர் உணவு அருந்த தொடங்கினார்.

    நீங்க வேற லெவல்

    நீங்க வேற லெவல்

    இது பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக தெரியும். ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பிசிறு தட்டாமல் பின்பற்றியுள்ளார். இவர் நினைத்திருந்தால் மாஸ்க்கை தனது உதவியாளரோ, கட்சியினரிடமோ, திருமண வீட்டாரிடமோ கொடுத்திருக்கலாம். ஆனால் அங்குதான் இவர் பொறுப்பான குடிமகனாக நடந்து கொண்டார். பயன்படுத்திய மாஸ்க்கை மற்றவர்களிடம் கொடுத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். மேலும் மாஸ்க்கை டேபிளில் வைத்தால் அந்த டேபிளை கொரோனா பாதித்தவர் தொட்டிருந்தால் அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சுருக்கமாக சொல்ல போனால் கொரோனாவால் நாமும் பாதிக்கக் கூடாது, நம்மால் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் உஷாராக இருந்தார் ஜெயக்குமார்! நிச்சயம் இது வேற லெவல்!

    English summary
    EX AIADMK Minister D Jayakumar followed covid protocol in public place wisely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X