இன்னைக்கேவா.. ஸ்டாலினை கவர்ந்த புள்ளி.. "தோப்பு"வை வளைத்த திமுக.. அமைச்சரின் மாஸ் செயல்..!
தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: ஒரு மெகா புள்ளி திமுக பக்கம் இன்னைக்கே தாவ போகிறதாம்.. இந்த கட்சி தாவலுக்கு பின்னணியில் அதே செந்தில்பாலாஜி தூணாக இருந்து வருகிறார் என்பது உப தகவலாக கசிந்து வருகிறது.
பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் சீனியர்... தொகுதிக்குள் நல்ல செல்வாக்கு பெற்றவர்..
கடந்த எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.

அதிருப்தி
இதற்கு காரணம், தோப்பு வெங்கடாசலத்தின் களப்பணியும், தொகுதி மக்களிடம் பெற்ற செல்வாக்குதான்.. அதிமுகவில் இருந்தவரை மாஜி அமைச்சர் கருப்பண்ணனுடன் மல்லுக்கட்டி வந்தார்.. பிறகு, இவருக்கு எடப்பாடி பழனிசாமியின் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில், தோப்புவுக்கு சீட்டும் தரப்படவில்லை.

தோல்வி
அதனால், சுயேச்சையாகவே போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.. இந்நிலையில்தான், இவர் திமுகவுக்கு தாவ போவதாக ஒரு செய்தி 2 நாளைக்கு முன்பு கசிந்தது.. இதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்னணி இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. போதுமான செல்வாக்கு, அதிமுகவில் இல்லாததாலும், முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள் ஈர்த்துள்ளதாலும் தோப்பு திமுகவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலம்
அதேசமயம், திமுகவுக்கும் இது பிளஸ் ஆக இருக்கும் என்கிறார்கள்.. கொங்குவில் சரிந்துள்ள திமுகவின் செல்வாக்கை, தோப்பு போன்ற சீனியர்களால் உயர்த்த முடியும் என்று திமுக தலைமை நம்புகிறது.. அதனாலேயே அவரது இணைப்புக்கு ஓகே சொல்லி விட்டதாக தெரிகிறது. ஆனால், திமுகவில் இணைந்தால், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டாராம் தோப்பு வெங்கடாசலம்.

முத்துசாமி
இதற்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான முத்துசாமி தடை போட்டுட்டு வருவதாகவும் கூறப்பட்டது.. எனவே, முத்துசாமியை சமாதானம் செய்து அதன்பிறகு தோப்புவை, திமுக தட்டி தூக்க திமுக முயன்று வந்தநிலையில், இப்போது தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வருகின்றன.. முத்துசாமியை சமாதானம் செய்துவிட்டார்கள் போலும்.. இன்றே தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறாராம்.

ஐக்கியம்
அப்படி இன்று இவர் இணைந்துவிட்டால், செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன், சேகர்பாபு வரிசையில், அதிமுகபின் பிம்பம் தோப்பு வெங்கடாசலமும் ஐக்கியமாகிறார்.. நாளுக்கு நாள் அதிமுக புள்ளிகளின் எண்ணிக்கை திமுகவில் உயர்ந்து கொண்டே வந்தாலும், திமுகவின் இந்த பாணி பாஜக போலவே உள்ளது என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்











Click it and Unblock the Notifications