முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் இவருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே அண்மைக் காலமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இருவரும் மனமுவந்து விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால், இதற்கு அவரது மனைவி தரப்பில் பதில மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications