பாலியல் தொல்லை! பொய் வழக்கு என 1 மணி நேரம் வாதாடிய ராஜேஷ் தாஸ்! இன்று மீண்டும் ஆஜர்
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் முதன்மை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமாவின் உத்தரவின் பேரில் வரும் 7ஆம் தேதி வரை தினமும் ஆஜராகி வாதாடி வருகிறார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். அந்த வகையில் இன்றும் ஆஜராகிறார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தான் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் வரை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்குவதை தள்ளி வைக்க அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை. விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்து ராஜேஸ்தாஸ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால் ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை. இதனால் கோபம் அடைந்த விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஜனவரி 28ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி அவரது தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் அவரது தரப்பு வாதத்தை முன் வைக்க கடந்த 29ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் ராஜேஷ்தாஸ் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்திருந்தார். இதையடுத்து மேல்முறையீட்டு மனு கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அப்போது மேல்முறையீட்டு வழக்கில் ராஜேஷ் தாஸ் தரப்பு வாதாட ஜனவரி 31 ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் அன்று வாதாடவில்லை என்றால் பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பூர்ணிமா திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த வழக்கு விசாரணையின் போது டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்குரைஞர் ஆதிசங்கர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகவும் அதற்கான உத்தரவு வரும் வரை தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பிப்ரவரி 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.
இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் கலா ஆட்சேபணை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டும் வாதத்தை முன் வைக்கவில்லை. பிப்.4 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க முடியாது. வியாழக்கிழமை பிப்.1ஆம் தேதி வாதத்தை முன் வைக்க வேண்டும். அவ்வாறு வாதத்தை முன் வைக்கவில்லை எனில் மூத்த வழக்கறிஞரை நீதிமன்றமே நியமித்து வாதிட நடவடிக்கை எடுக்கும் எனக் கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடந்த விசாரணையின் போது ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி தானே வாதிட்டர். இந்த வழக்கு பொய் வழக்கு என்றும் தன்னை சதி வலையில் சிக்க வைத்து விட்டதாகவும் கூறி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி ஒரு மணி நேரம் வாதிட்டார்.
இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை தினமும் பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதியளித்து நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார். அந்த வகையில் இன்றைய தினம் ராஜேஷ் தாஸ் ஆஜராகிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications