விஆர்எஸ் பெற்று திமுகவில் இணைந்தார் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன்.. வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி க.பாலமுருகன் திமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் பாலமுருகன்.
மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் க.பாலமுருகன். ஓய்வு பெற இன்னும் 6ஆண்டு காலம் இருந்தும் விருப்ப ஓய்வு பெற்று இவர், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் கட்சி தாவி வருகின்றனர். அந்தவகையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியான திமுகவுக்கு பலரும் தாவி வருகின்றனர். இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான பாலமுருகன் திமுகவில் இணைந்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அலுவலகத்தில். விருப்ப ஓய்வு பெற்ற மத்திய ஜி.எஸ்.டி நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநர் (Voluntarily Retired Principal Additional Director General (DG GST Intelligence) முனைவர் க.பாலமுருகன், ஐ.ஆர்.எஸ் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, மாநில அயலக அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட க. பாலமுருகன், "வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம் என்ற உறுதியுடன் அயராது செயலாற்றும் திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் முதலமைச்சர்
ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications