அதிமுகவில் அதிக உறுப்பினர்கள்! நம்பர் 1 இடத்தில் சி.விஜயபாஸ்கர்! 4வது இடத்தில் எஸ்.பி.வேலுமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அதிக உறுப்பினர்களை சேர்த்ததில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதலிடத்தை பெற்று எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார்.

அதிக உறுப்பினர்கள் இணைப்பில் எஸ்.பி.வேலுமணி முதலிடத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 4வது இடத்துக்கு தள்ளப்படுள்ளார். இதனிடையே இதன் மூலம் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிமுகவுக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

Ex-minister C.Vijayabaskar has taken the top place in adding the most members to AIADMK

எடப்பாடி பழனிசாமிக்கு சி.விஜயபாஸ்கர் மீது ஆரம்பத்தில் அதிருப்தி இருந்தது உண்மை தான். குறிப்பாக கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த தன்னையே பின்னுக்கு தள்ளி ஊடகங்கள் மூலம் விஜயபாஸ்கர் விளம்பரத்தில் ஸ்கோர் செய்தது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் சி.விஜயபாஸ்கரை சற்று தள்ளியே வைத்து வந்தார்.

இருப்பினும் தனது சுறுசுறுப்பான கட்சிப்பணிகளால் எடப்பாடி பழனிசாமியின் மனதை கவர்ந்த விஜயபாஸ்கர் அவரை தனது சொந்த தொகுதியான விராலிமலைக்கு அழைத்துச் சென்று காளைச் சிலையை திறக்க வைத்தார். எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் கடல் போல் கூட்டத்தை கூட்டி கட்சித் தலைமைக்கு தனது லோக்கல் செல்வாக்கை நிரூபித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்களும் செய்யாத ஒரு காரியத்தை செய்து சாதித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக அதிமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றோர் 4வது இடத்துக்கு மேல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+