அதிமுக மாஜிகளுக்கு விஜய் வலை வீசுறாரே? வந்து விழுந்த கேள்வி! ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ஜெயகுமார்
சென்னை: முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமசந்திரன் உள்ளிட்ட மாஜிக்களுக்கு விஜய் கட்சி தூண்டில் போடுவதாக சொல்லப்படுகிறதே அது குறித்து உங்கள் பதில் என்ன என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: அதாவது சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , நான் சொல்வதெல்லாம் பொய் என்பது போல் நடந்து கொள்கிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் கிடையாது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் இறந்திருக்கிறார்கள். டெங்குவை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே பேட்டி கொடுப்பதும், உண்மைகளை மறைத்து பேட்டி கொடுப்பதும், என்பதுதான் இன்று இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சரின் செயல்பாடு.
தமிழகத்தில் மருத்துவத் துறை ஐசியூவில்தான் போய்விட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனைகள் மருத்துவர், செவிலியர், மருந்து இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் வேதனையான சூழல்தான் இருக்கிறது.
விஜய் தனது கொடியில் அண்ணா, எம்ஜிஆர் வைத்ததால் அதிமுகவின் வாக்குகள் சரியாது. கடந்த கால தேர்தல்களில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. தனிமனிதனின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட அரைகூவலாகத்தான் நிச்சயம் எடுத்துக்க முடியும். இலங்கை சிறையில் இருப்போரை மொட்டை அடித்து அனுப்புவது என்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
இதுகுறித்து விடியா திமுக அரசுக்கு எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கிறது. பாக் வளைகுடா மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். 22 பேரில் 11 மீனவர்களை விடுவித்துவிட்டு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?
காற்றின் திசை காரணமாக படகுகள் எல்லை தாண்டினால் அதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி எல்லைத்தாண்டினால் அவர்களை கடலோர காவல் படையிடம்தானே ஒப்படைக்க வேண்டும்? வேதாரண்யத்தில் உள்ள மீனவர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தனர். இவ்வாற ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஜெயக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் சரி, அது அவரை கோபப்படுத்தினாலும் அதை நிருபர்களிடம் காட்டிக் கொள்ளாமல் பதில் சொல்வார். ஆனால் இந்த முறை விஜய் குறித்த கேள்விக்கு ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக முடித்துவிட்டார். இது ஏன் என தெரியவில்லை.
ஒரு காலத்தில் திமுகவின் தரைப்படை தளபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமசந்திரன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் என்ற தகவல் கசிந்தது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விஜய் கட்சியில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை, பேசினால் சொல்கிறேன் என சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் செஞ்சி ராமசந்திரன் விஜய் கட்சிக்கு போக போவதாக வரும் தகவல்கள் வதந்திதான் என தெரிவித்துள்ளார்.
-
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு











Click it and Unblock the Notifications