விஜய் கட்சியை திமுக அழித்து விடும்! அதிமுக கூட்டணிக்கு வந்து விடுங்கள்! ராஜேந்திர பாலாஜி அழைப்பு
சென்னை: "விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்" என தவெக தலைவர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். விஜய் தனித்து போட்டியிட்டால் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக அழித்து விடும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திமுகவை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி எனத் தெரிவித்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
விருதுநகர் சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் திமுக தமிழக வெற்றிக் கழகத்தை அழித்துவிடும். விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. விஜய் நடிகர் என்பதால் அவரைப் பார்க்க நாங்கள் கூட செல்வோம். தல அஜித், சூப்பர் சார் ரஜினிகாந்த் வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் அதிக அளவில் வரும்.
தேர்தல் களத்தில் திமுக தவெகவிற்கு மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான், இரண்டாவது இடத்திற்கு இரு கட்சிகளுக்கு போட்டி என்பதை விஜய் சொல்கிறார். களத்தில் அதிமுகதான் வெற்றி பெறும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், திமுக ஆட்சியை தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். விஜய் தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்.
விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலோடு விஜயை திமுக முடித்து விடும். விஜய் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும். அதிமுகவின் பலம் மற்றும் அரசியல் அனுபவம் விஜய்க்குத் தேவை. நடிகர் என்ற பிம்பம் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தராது என்றும், அரசியல் என்பது வேறு" எனத் தெரிவித்தார்.
-
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல்












Click it and Unblock the Notifications