செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தை.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த டாக்டர்கள்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

இந்த வேளையில் போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்து சென்றது. அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வும், ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களை நாடியும் எந்த பலனும் இல்லை. தற்போது அவரது நீதிமன்ற காவல் 49 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் சிறையில் அவர் மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அவருக்கு பரிசோதனையுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தொடர்ந்து செந்தில் பாலாஜி குணமடைந்து வந்தார். இதையடுத்து நேற்று ஒருநாள் மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜியை கண்காணித்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று செந்தில் பாலாஜியின் உடல்நலம் என்பது சீரானது. இதையடுத்து செந்தில் பாலாஜியிடம், ‛‛உங்களின் உடல்நலம் சீராகி உள்ளது. உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? பிரச்சனை இல்லையென்றால் டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம்'' என தெரிவித்தனர்.
இதை கேட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகி கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications