234 MLA-க்களில் 190 பேர் கோடீஸ்வரர்கள்! "கஜானா காலியாச்சே!" எப்படி கார் கொடுப்பார் விஜய்? எழிலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 234 தொகுதி எம்எல்ஏக்களில் 190 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை சொல்லும் நிலையில் எதற்காக எல்லா எம்எல்ஏக்களுக்கும் கார் என முன்னாள் திமுக எம்எல்ஏ எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ எழிலன் நாகநாதன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: எல்லா சட்டசபை உறுப்பினர்களுக்கும் கார், உதவியாளர்களுக்கு சம்பளம், பெட்ரோல் மானியம் கொடுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

tvk dmk

ஏற்கெனவே ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தொகுதி மக்களுக்காக ஆண்டுக்கு ரூ 3 கோடி எம்எல்ஏ நிதி ஒதுக்கப்படுகிறது. இதை முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் கொண்டு வந்தார்.

தவெக அரசு பொருளாதார நெருக்கடி, நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதாக முதல்வரும், நிதியமைச்சரும் தெரிவித்துள்ள நிலையில் இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் என்ன நியாயம்?

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் யார் யாருக்கு கார் இருக்கிறது, அவர்களின் பொருளாதார சூழல் என்ன, அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதெல்லாம் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஏடிஆர் (ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்) அறிக்கையின்படி 234 தொகுதி எம்எல்ஏக்களில் 190-க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள். ஏழை எளிய மக்களை சட்டசபைக்கு அழைத்து வந்ததாக குறிப்பிடும் முதல்வர் விஜய், எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து யாருக்கு உண்மையில் கார் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே மாநிலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த தவெக அரசு வந்ததும் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவிட்டார்கள் என கூறிவிட்டு, தற்போது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், உதவியாளர், பெட்ரோல் படி என்றால் இதை ஏற்க முடியாது.

உண்மையில் வறுமையில் இருக்கும் உறுப்பினர்களை தேர்தல் பிரமாண பத்திரத்தின் மூலம் கண்டறியலாம். அதைவிட்டுவிட்டு தனிப்பட்ட காரணங்களை கூறி சட்டசபையில் பேசுவது முறையல்ல.

தமிழ்நாடு சட்டசபை பல வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை பார்த்திருக்கிறது. ஆனால், பெரிய பெரிய கார் வைத்துக் கொண்டு சட்டசபையில், "நான் ஆட்டோவில் வரேன், என்னை அடையாளம் தெரிய மாட்டேங்கிது, எனக்கு வேலை தர மாட்டேங்கிறாங்க, என்னை யாரும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்க" என சட்டசபைக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களையும் இந்த சட்டசபை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு எழிலன் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+