"கிளைமேட்டே" மாறிடுச்சே.. "ஸ்டாலின் செய்தது தப்பே கிடையாது.. ஆளுநர் தான்".. டிடிவி தினகரன் ஒரே போடு
டிடிவி தினகரன் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளை மனம்திறந்த பாராட்டி உள்ளார்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மனம்திறந்து பாராட்டி உள்ளார்.. ஆளுநர் தொடர்பான முதல்வரின் சட்டசபை செயல்பாடுகளுக்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளார். என்னவா இருக்கும்??
"தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும், தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும்" என்ற ஆளுநர் ரவியின் பேச்சு சர்ச்சையானது..
இதற்கு பிறகு, அரசு தயாரித்த அறிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் வாசிக்காததும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டன உரையின்போது ஆளுநர் அவையை விட்டு திடீரென வெளியேறியதும், இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அஸ்தி நெருப்பு
அத்துடன், மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக டிடிவி தினகரன், போன்றோரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. இதில் டிடிவி தினகரன் கண்டனமானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. காரணம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த அதேசமயம், திமுக அரசின் மீதான தவறையும் சுட்டிக்காட்டியிருந்தார்.. அதாவது 2 தரப்பையுமே தினகரன் விமர்சித்திருந்தார். "ஆளுநர் உரையைத் தயாரித்து அதனை இறுதி அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், தமிழக அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்று அரங்கேறியிருக்கின்றன.

வீக்னஸ்
அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்த பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியதும் அவசியம்... இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று தினகரன் வெளிப்படுத்தியிருந்தார்.

பேஷ் தினகரன்
இந்நிலையில், இப்போது தினகரன் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் ஒரு படி மேலே போய், முதல்வர் ஸ்டாலினை பாராட்டியே உள்ளார்.. அத்துடன், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாட்டை பாராட்டியும் உள்ளார்.. தினகரன் பேசும்போது, "ஒருவேளை தன் உரையில், கவர்னருக்கே சில கருத்துக்களில், உடன்பாடு இல்லையென்றால், அவரே அரசாங்கத்திடம் பேசி, அதை அச்சிடுவதற்கு முன்பேயே மாற்றி தர சொல்லியிருக்கலாம்.. அதைவிட்டுட்டு, அப்படி ஒரு செயல்பாடு தேவையா? தீர்மானம் கொண்டுவந்தது குறித்து, முதல்வர் ஸ்டாலினை குறை சொல்வதானால் சொல்லலாம்.

தப்பில்லை
ஆனால், அவர் செய்தது தவறு இல்லை என்றுதான் நினைக்கிறேன். எதிர்க்கட்சி என்பதற்காக, எதையும் சொல்லிவிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளும்கட்சியை சேர்ந்தவர்களும், அரசியலமைப்பு சட்டப்படி, கவர்னர் அங்கிருந்து கிளம்பும்வரை பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் இப்படி தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு முதல்வரின் நிலைமையை உருவாக்கியதே கவர்னரின் செயல்பாடுகள்தானே. அதனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறிவிட்டார் என்றெல்லாம் நாம் சொன்னாலும், உண்மை என்னவென்றால், ஒரு அரசியல் தலைவராக, முதல்வர் செய்தது தவறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இப்படி அப்படி பேசுவாங்க
ஏனென்றால், கவர்னரே ஒரு அரசியல்வாதிபோல், தமிழ்நாடு என்று பெயர் வைத்ததை தப்பு என்கிறார். இதுபோல எத்தனையோ விஷயங்கள்... திராவிடத்தை பற்றி அவர் பேசுகிறபோது, தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருப்பவர், மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர், அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆளுநர் அங்கிருந்து சென்றபிறகு, சட்டமன்றத்தில், அதற்பிறகு தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம்.. ஆனால், அப்படி நிறைவேற்றியிருந்தால், "கவர்னரை எதிர்க்க துணிச்சல் இல்லை" என்று உடனே சொல்லவும் செய்வார்கள். எது எப்படியோ, இந்த நிகழ்வு ஜனநாயகத்தக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

பழனிசாமி
தினகரனை பொறுத்தவரை, திமுக மட்டுமே பிரதான எதிரியாக நினைத்து களவாடி வருகிறார்.. பாஜக, அதிமுகவை எல்லாம் விமர்சிப்பதைவிட்டு, திமுக மீது கவனம் செலுத்துங்கள், திமுகதான் நம் முதல் எதிரி என்று தன்னுடைய அமமுக நிர்வாகிகளுக்கே வாய்மொழி பிறப்பித்ததாக பலமுறை செய்திகள் வெளியாகின.. அதுமட்டுமல்ல, தினகரன் எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும், "பழனிசாமி" என்று எடப்பாடியை விமர்சிக்க ஆரம்பித்து, மறக்காமல் திமுக அரசையும் அழுத்தமாக விமர்சித்துவிட்டே செல்வார். அதுமட்டுமல்ல, இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைக்க அமமுக ரெடியாகி வருவதாகவும் சொல்லப்பட்டு வரும்நிலையில், தினகரன் திடீரென ஆளுநரை விமர்சித்தது வியப்பை தருகிறது என்றால், ஸ்டாலினை பாராட்டியிருப்பது, அதற்கு மேல் நமக்கு ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது..!!
-
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications