மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்.. அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கு மேஜர் அட்வைஸ்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: மாநகர போக்குவரத்து கழகம், அரசு பஸ் கண்டக்டர்களுக்கும், டிரைவர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சாலை விபத்துகளில் அநியாயமாக உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு: சமீபத்தில், தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது. அந்தவகையில், கடந்த 2021ம் ஆண்டு, இந்தியா முழுவதும், இந்த ஒரு வருடத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 4ல் 1 பங்கு விபத்துகள், சாயங்காலம் 6 முதல் இரவு 9 மணிக்குள் நடந்திருப்பதாக கூறியிருந்தது.
கடந்த 2022ம் ஆண்டில் நடைபெற்ற விபத்துக்கள் தொடர்பாக, இன்னொரு அறிக்கையும் வெளியாகியிருந்தது. அதில், 2022ம் ஆண்டில் மொத்தம் 4,46,768 சாலை விபத்துகள் நாடு முழுவதும் நடைபெற்றிருக்கிறது..
வாகனங்கள்: இதில் அதிகபட்சமாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 90,663 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாம்.. வேலை நேரம் முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வாகனங்களும், மாலையில் வெளியே செல்பவர்களின் வாகனங்களும் ஏற்படுத்தும் நெரிசல் காரணமாக இந்த விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் கவனமாக, எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், மத்திய அரசு கேட்டுக கொண்டிருந்தது.
லிஸ்ட் இதுதான்: இந்த லிஸ்ட்டில் நம்முடைய தமிழ்நாட்டில் 506 பேரும் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், நம்முடைய சென்னை மாநகர போக்குவரத்து கழகம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு முக்கிய அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
- மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
- அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.
- ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
- அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
- பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
- பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications