Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2 பழைய இருக்கா? அதுல இந்த "786" நம்பர் இருக்கா? அப்ப 5 லட்சம் ரூபாய் கிடைக்குதாமே.. செம்ம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 ரூபாய் நோட்டு இருந்தால், 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று ஆன்லைனில், ஒரு விளம்பரம் மீண்டும் சுற்ற துவங்கியிருக்கிறது.. இது எந்த அளவுக்கு உண்மை? பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்க முடியுமா? எப்படி விற்பது?
விரைவாக பணம் சம்பாதிக்க ஆன்லைனில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. அதில், ஒன்றுதான், பழைய நாணயங்கள், பழைய ரூபாய்களை விற்பனை செய்வது... இதுகுறித்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேஉள்ளது.

பழைய நாணயங்கள்: சில நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், அதற்கான மதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.. உண்மையை சொல்லப்போனால், அசல் மதிப்பை விட அதிக மதிப்புகள் தற்போது இந்த பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்து வருகின்றன. அதேசமயம், எல்லாவகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களுக்கும் இது பொருந்தாது. ஒருசில அடையாளங்களுடன் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்பார்கள்.

old rs2 note 2rs coin online marketing 2 2

குறிப்பாக, 1994-ல் நம்முடைய தேசியக்கொடியுடன் கூடிய ரூ.2 நாணயம் இருந்தால், அந்த நாணயத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பு, இப்போது உள்ளதாம்.. அந்த 2 ரூபாய் நாணயத்தை நீங்கள் ஆன்லைன் சந்தையில் விற்றால், ரூ.5 லட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.

சிறப்பு நோட்டுகள்: அதேபோல, பழைய 5 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டால், 786 என்ற எண் அதில் இடம் பெற்றிருக்க வேண்டுமாம். இந்த எண் இஸ்லாமிய மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுவதால், இதற்கு எப்போதுமே ஆன்லைன் சந்தையில் தேவை உள்ளது.. இன்றைய தேதியில், 786 வரிசை எண்ணுள்ள, ரூபாய் நோட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம்.

அதேபோல, 123456 என்ற தொடர் வரிசை எண்கள் இருந்தால், அதுவும் சிறப்பானதே.. ஆனால், கிழியாமல், அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரூபாய் நோட்டுகள் இருந்தால், நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும். கிழிந்த மற்றும் அதிகம் மடிக்கப்பட்ட காகிதங்களை யாரும் வாங்க மாட்டார்கள்.

லட்சக்கணக்கில் பணம்: பழைய 20 ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் போட்டோவும் இருக்க வேண்டும். "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.. இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல் விற்பனை செய்யலாம்.. வெறும் 20 ரூபாய்க்கு, 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்குமாம்.

இதுசம்பந்தமான பழைய ரூபாய் நோட்டு, பழைய நாணயங்கள் உங்களிடம் இருந்தால், அதனை ஆன்லைனில் விற்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் உங்களிடமிருக்கும் ரூபாய் அல்லது நாணயத்தை, 2 பக்கங்களும் பளிச்சென போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் சந்தை: www.quikr.com-ல் என்ற வெப்சைட்களில் உங்களிடமிருக்கும் பழைய நாணயங்கள் மற்றும் கரன்சி நோட்டுகளை விற்பனை செய்யலாம். இதற்கு நீங்கள், மேற்கண்ட இந்த வெப்சைட்டை பதிவு செய்து கொள்ள வேண்டும். வெப்சைட்டில் Post Free Ad என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ரூபாய் அல்லது நாணயத்தின் போட்டோக்களை, அந்த வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பிறகு விலையை நிர்ணயம் செய்து, அதனை பதிவில் தெரிவிக்க வேண்டும். உங்களது போன் நம்பர், மின்னஞ்சல் ஐடியையும் கொடுத்தால் போதும். இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையென்றால், உங்களிடம் அணுகுவார்கள்.

வெப்சைட்கள்: உங்கள் பழைய கரன்சி நோட்டுகளை விற்க, eBay, CoinBazzar என்று இன்னும் நிறைய வெப்சைட்கள் உள்ளன.. இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானது தான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் நீங்கள் மட்டுமே கவனமாக செயல்பட வேண்டும். ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் மற்றும் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும். ஆனால், இதுபோலல ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+