20 ரூபாய் நோட்டு இருக்கா? லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்.. பழைய "காயின்" இருக்கா? சூப்பர் சான்ஸ்
சென்னை: வெறும் 10 ரூபாய், 20 ரூபாய் இருந்தாலே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் சோஷியல் மீடியாக்களில் பெருகி வருகிறது.
சமீபகாலமாகவே ஆன்லைன் சந்தைகள் பெருகி கொண்டே வருகின்றன.. பழைய மற்றும் அரியவகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்டுகளும், இந்த ஆன்லைன் சந்தையில் பெருகியபடியே உள்ளன.

அதாவது, பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது போன்ற செய்திகள் சோஷியல் மீடியாவில் அடிக்கடி வெளியாகி கொண்டேயிருக்கின்றன..
இதற்கு காரணம், இந்த பழைய ரூபாய்களுக்கான டிமாண்டுகள் அதிகமாக உள்ளதாம்.. உதாரணத்துக்கு 10 பழைய ரூபாய் நோட்டுக்களில் உள்ள சீரியல் நம்பர் மிகவும் ஸ்பெஷலானது.. இதில் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும் என்பதால், இதற்கான மவுசு, ஆன்லைன் சந்தையில் கூடுகிறது. அந்தவகையில், நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் டிமாண்டு உள்ளது.
பழைய ரூபாய்: பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்.. 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். இதற்காகவே , https://coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளது.. இந்த இணையதளத்திற்கு சென்று, உங்களிடமுள்ள 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் விற்கலாம். 10 ரூபாய் என்றில்லை, பழைய 20 ரூபாய் நோட்டுக்கள், 50 ரூபாய் நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.
இதில் 20 ரூபாயில், முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் போட்டோவும், "786" என்ற நம்பரும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டினை, ஆன்லைனில் OLX -ல், 6 லட்சம் ரூபாய் வரை விற்கலாம். பழைய 50 ரூபாய் இருந்தால், ஆன்லைனில் ரூ.25,000,00/- வரை விற்பனை செய்து சம்பாதிக்க முடியுமாம்.
நாணயங்கள்: இதில், நாணயங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.. மாதா வைஷ்ணோ தேவி உருவம் கொண்ட நாணயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாம்.. இதற்கும் ரூபாய் நோட்டுக்களை போலவே, அதிக டிமாண்ட் இருக்கிறது.
இந்த நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஆன்லைனில் விற்று 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதுபோலவே, காண்டாமிருகத்தின் படத்துடன் கூடிய 25 பைசா நாணயம் இருந்தால் அதையும் 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம்.
எப்படி விற்பது: நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை விற்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட இணையதளத்தில், உங்கள் சுயவிவரத்தை உருவாக்கி, உங்கள் செல்போனையும் பதிவு செய்ய வேண்டும். உங்களிடமிருக்கும் அந்த பழைய நோட்டு அல்லது நாணயங்களை தெளிவாக 2 பக்கமும் போட்டோ எடுத்து, அதை அப்லோடு செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.
நீங்கள் மட்டுமே பொறுப்பு: ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு அல்லது நாணயங்களுக்கு இருக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்குமாம்.. ஆனால், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே கவனமுடன் செயல்பட வேண்டும். காரணம். ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை.
நீங்கள் 50 ரூபாய் பழைய நோட்டுக்களை விற்க முனைந்தால், முன் பக்கத்தில் வரிசை எண் 085 எழுதப்பட்டிருப்பது முக்கியமாகக் பார்க்கப்படுகிறது.. மேலும், 50 நோட்டின் நிறமும் இளஞ்சிவப்பாக இருக்க வேண்டுமாம்.. இதுபோன்ற 4, 50 நோட்டுகளை உங்களிடம் வைத்திருந்தால், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம் என்கிறார்கள்..!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications