"மிட்நைட்டில்".. யாருமில்லாத ரோட்டில்.. இளம்ஜோடி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. என்னவா இருக்கும்?
: மிட்நைட்டில் சாலையில் இளம்ஜோடி ஒன்று நடனமாடிய வீடியோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: மிட்நைட்டில்.. நடுரோட்டில்.. இளம்ஜோடி செய்த காரியத்தை பார்த்துதான், இணையவாசிகள் மலைத்து போயுள்ளனர்.. அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டுமிருக்கிறது.
வித்தியாசமான வீடியோக்கள் எப்போதுமே இணையத்தில் டிரெண்டாகிவிடும்.. அதேபோல, இதயத்தை பிழிந்தெடுக்கக்கூடிய அல்லது அதிர்ச்சி தரக்கூடிய, நெகிழ்ச்சி தரக்கூடிய வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகும்
பெரும்பாலும் வினோதமான வீடியோக்களே, டிரெண்ட் ஆகும் என்றாலும், சில சமயம் இந்த வீடியோக்கள் காமெடியாக இருக்கும்.. சில சமயம் பயமாக இருக்கும்.. சில சமயம் ஆச்சரியத்தை தரும்..!

மிட்நைட்டில்
இப்போது ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இரவு நேரம் இந்த வீடியோ பதிவாகி உள்ளது.. நிறைய தெருவிளக்குகள் தென்படுகின்றன.. ஆனால், எந்த ஊர் என்று தெரியவில்லை.. யார் இவர்கள் என்றும் தெரியவில்லை.. நடுரோட்டிலேயே ஒரு இளம்ஜோடி டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.. ஏதோ பொழுதுபோக்குக்காக இவர்கள் ஆடவில்லை.. நிஜமாகவே, சீரியஸாகவே, ஆடியிருக்கிறார்கள்.. அனுபவமிக்க டான்சர்கள் போலவே வளைந்து நெளிந்து அசால்ட்டாக ஆடுகிறார்கள்..

நடன அசைவுகள்
நிச்சயம் டான்ஸ் பயின்றவர்களாத்தான் இப்படி ஆட முடியும். ஒரே மாதிரி ஆடுகிறார்கள். யாருமில்லா ரோட்டில், இங்கு வந்து இவர்கள் டான்ஸ் ஆட காரணம் விளங்கவில்லை.. ஆனால், நடன அசைவுகளில் இருவரும் மூழ்கிவிட்டனர் என்றே சொல்லலாம்.. அநேகமாக இந்த வீடியோ, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கலாம் அல்லது அருகில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடத்தின் மாடியிலிருந்து எடுக்கப்பட்டிக்கலாம் என்றே தெரிகிறது..

வியூவ்ஸ்கள்
கிட்டத்தட்ட 16 வினாடிகள் கொண்டது இந்த வீடியோவை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கிறார்கள்.. 1500க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் செய்துள்ளனர்.. 2.5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்கள் விழுந்துள்ளன. பொதுவாக, போதையில் இப்படி சாலையில் குடிமகன்கள் டான்ஸ் ஆடுவது வழக்கம்.. சில சமயம் பெண்கள்கூட, போதை தலைக்கேறி நடுரோட்டில் டான்ஸ் ஆடியதும் உண்டு.. சில வருடங்களுக்கு முன்பு, கிகி சேலஞ்ச் என்ற ஒரு விளையாட்டு இந்தியாவில் பிரபலமானது..

பிரபலங்கள்
அதாவது, ஓடும் காரில் இருந்து இறங்கி, சாலையில் டான்ஸ்ஆடிவிட்டு, மறுபடியும் காரில் ஏறி கொள்ள வேண்டும்.. இதுதான் அந்த விளையாட்டின் விதி.. உபி, மஹாராஷ்டிரா, டெல்லி என பல மாநிலங்களில் இளைஞர்களுக்கு இணையாக பிரபல சினிமா நடிகர்களும், பிரபலங்களும்கூட, இந்த கிகி சேலஞ்ச் விளையாட்டிற்கு ஆர்வம் காட்டினார்கள்.. ஆபத்தான இந்த விளையாட்டினால், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வார்னிங்
அதற்கு பிறகுதான் போலீசார் வார்னிங் தந்து இந்த விளையாட்டை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.. இப்படி சாலையில் நடனமாடுவதில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், எந்தவித பப்ளிசிட்டிக்காகவும், பணத்துக்காகவும் இல்லாமல், இந்த ஜோடி டான்ஸ் ஆடியுள்ளது வியப்பை தந்து வருகிறது.. சிறிது நேரமே என்றாலும், நடனத்தின் மீதான அர்ப்பணிப்பைதான் இந்த ஜோடியின் வீடியோ மூலம் நம்மால் உணர முடிகிறது..!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications