ஆதாரே ஆதாரம்.. விட்றாதீங்க மக்களே.. இது முக்கியம்.. புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை குறித்த அறிவிப்பு
சென்னை: ஆதார் அட்டையில் நம்முடைய பழைய புகைப்படத்துக்கு பதிலாக புதிய புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம்.. அதேசமயம், புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை எப்படி டவுன்லோடு செய்யவேண்டும் தெரியுமா?
நம் நாட்டிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.
அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதாரமான, அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கும்.
போட்டோக்கள்: காரணம், அந்த நேரத்தில் அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டி வந்தது.. எனவே அவர்களின் போட்டோக்கள் அவர்களுக்கே அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும்.. சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். இதனால் நிறையப் பேர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்யலாம் என்று நினைக்கக்கூடும்.. அது எளிதான காரியம்தான்...
பொதுவாகவே, ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்துவிடலாம். ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும். ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வழிமுறைகள்: - UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (uidai.gov.in) பார்வையிடவும் அல்லது இந்த இணைப்பை (https://uidai.gov.in/) கிளிக் செய்யவும்.
- இப்போது 'Aadhaar Update' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- அங்கு இருக்கும், ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.
- உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் உங்களை படம் எடுத்துக்கொள்வார்.
- இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
- ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார்.
- உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

ஆதார் அட்டை போட்டோ புதுப்பிப்பு: இதற்குப் பிறகு, உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனிலும் கண்காணிக்கலாம். UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம். நீங்கள் வழங்கிய விவரங்கள் ஆதார் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட 90 நாட்கள் ஆகும்.
நீங்கள் கொடுத்த விவரங்கள் மற்றும் போட்டோக்கள் புதுப்பிக்கப்பட்டதுமே, ஒரு புதிய நகலை பதிவிறக்கம் செய்து அதை அச்சிடவும் முடியும். இருந்தாலும், ஆதார் அட்டையில் போட்டோக்களை புதுப்பிக்கும் முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்... இதற்கு கண்டிப்பாக ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.. அதேபோல, புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த வழிமுறைகள் வெளியாகி உள்ளன..
ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை செயலாக்கப்பட்டதும், புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம் . புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்:

வழிமுறைகள்: - ஆதார் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை https://uidai.gov.in/ -ல் பார்வையிட வேண்டும்
- ' எனது ஆதார் ' பகுதிக்கு செல்ல வேண்டும் -
- ' ஆதாரைப் பதிவிறக்கு ' விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது இந்த இணைப்பை நேரடியாகப் பார்வையிடவும் https://eaadhaar.uidai.gov.in/
- 'ஆதாரைப் பதிவிறக்கு ' என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்த பக்கத்தில், உங்கள் ஆதார் எண், பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடியை உள்ளிடவும்
- கேப்ட்சாவை உள்ளிட்டு 'செண்ட் OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, உங்களுக்கு முகமூடி செய்யப்பட்ட ஆதார் அட்டை வேண்டுமானால் எனது தேர்வுப்பெட்டியில் டிக் செய்ய வேண்டும்
- இப்போது, உங்கள் இ-ஆதார் கார்டின் PDFஐப் பதிவிறக்க, ' சரிபார்த்து பதிவிறக்கு' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications