பீஸ் பீஸா நொறுங்கிடுச்சே.. "பாஜக தனித்து நின்றால் ஒரு சீட்டில்கூட ஜெயிக்காது".. எகிறியடித்த ஸ்டாலின்

தமிழக பாஜக தனித்து நின்றால் ஒன்றில்கூட வெற்றி பெற முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.. அத்துடன், தமிழக பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது, அரசியல்கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் தமிழகமும் களத்தில் குதித்துள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் விவகாரங்கள் போன்றவை குறித்த மறைமுகமான பேச்சுக்கள் அரசல்புரசலாக நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி மட்டும்தான், இப்போதைக்கு உறுதியாகவும், வலுவாகவும் உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை கூட்டணியே இந்த முறையும் தொடரும் என்றே நம்பப்பட்டு வருகிறது..

 சண்முகம் டமார்

சண்முகம் டமார்

திடீரென பாஜக - திமுக கூட்டணி என்று சிவி கொளுத்திபோடவும், அந்த சலசலப்புக்கும் திமுக கூட்டணியே பதிலடி தந்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.. அதேபோல, காங்கிரஸ் தரப்பில் கூட்டணி மேலிடத்துடன் சில அதிருப்திகள் இருந்து வந்தநிலையில், அதையும் முதல்வர் ஸ்டாலின் நொறுக்கி தள்ளிவிட்டார்,.. கடந்த 2 நாட்களுக்குமுன்பு, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் தந்திருந்த பேட்டியானது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.. காரணம், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தும், காங்கிரசுடன் திமுகவிற்கு இருக்கும் நட்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அதில் ஓபனாகவே கூறியிருந்தார்..

 சூப்பர் ராகுல்

சூப்பர் ராகுல்

அத்துடன் ராகுலை மனதார புகழ்ந்து, பாஜகவை எதிர்க்க ராகுல் எந்த அளவுக்கு களமிறங்கி உள்ளார் என்பதையும் விலாவரியாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பேட்டியையும் பிடிஐ-க்கு ஸ்டாலின் தந்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டாலும், "தேசிய அளவில் பாஜக தன்னுடைய பலத்தை அதிகரித்துள்ளதோடு, தமிழகத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக 4 எம்எல்ஏ சீட்களில் வென்றிருக்கிறது. அதோடு, ஆளும் திமுகவை பாஜ மாநில பிரிவு பல்வேறு பிரச்னைகளில் தாக்கி வருகிறது. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் அமைப்பாக பாஜக உருவெடுக்க செய்யும் முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று பிடிஐ நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் தந்த பதில் இதுதான்:

 தோளில் சவாரி

தோளில் சவாரி

"இதற்கு நான் தெளிவாகவே பதில் சொல்கிறேன்.. தமிழக மக்களும்சரி, நாமளும் சரி, பாஜவை தமிழகத்தில் முதன்மை எதிர்க்கட்சியாகவே பார்க்கவில்லை.. கடந்த 2001 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தோளில் சவாரி செய்த அந்த கட்சி, 4 எம்எல்ஏக்களை பெற்றது... 20 வருடங்களுக்கு பிறகு இப்போது, அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, 2021ல் மறுபடியும் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது... தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜவின் பலம் இவ்வளவுதான்.. அவர்கள் தனித்து நின்றால் தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது...

பலவீனம்

பலவீனம்

அதிமுகவை கட்டுப்படுத்தி வளர பாஜக முயற்சிக்கிறது... இது ஒரு பலவீனமான உத்தி மட்டுமல்ல, அது மிகவும் தவறான ஒன்றும்கூட.. தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது கிடையாது.. அவர்கள் வளரச்சி அடையவில்லை... அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது" என்றார் ஸ்டாலின். இதையடுத்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளதே.. ஆனால், காங்கிரஸ் மோசமான நிலையில் உள்ளது... திமுகவின் தலைவர் என்ற முறையில் இந்த வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று அடுத்த கேள்வி ஸ்டாலினிடம் எழுப்பப்பட்டது..

 கவ்வும் மண்

கவ்வும் மண்

இதற்கு முதல்வர் தந்த பதில் இதுதான்: "ஒரு மாநில தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையையும் தீர்மானித்துவிட முடியாது.. பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலம் குஜராத்... அதனால், குஜராத் தேர்தலில் அவர்கள் ஸ்பெஷலான கவனத்தை செலுத்தினார்கள்.. இதைதவிர, உள்ளூர் காரணிகளும் பாஜகவுக்கு உதவியுள்ளது.. அதனால், குஜராத் மக்கள் வாக்களித்ததுபோலவே, இந்தியாவின் மொத்த மக்களும் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைத்துவிட கூடாது.. குஜராத்தில் பாஜவிடம் தோல்வியடைந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே.. இதே பாஜக, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளதே.. அதனால், இந்தியா முழுவதும் பாஜவுக்கு ஆதரவு மாறுபட்டு இருப்பதை இதன்மூலமே நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்" என்றார் ஸ்டாலின்.

 கோட்டை காவி கொடி

கோட்டை காவி கொடி

முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிலானது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தனித்து நின்றாலே 70 சீட்களில் ஜெயிப்போம் என்று அப்போதைய மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.. கோட்டையில் காவி கொடி விரைவில் பறக்கும் என்றும் சவால் விட்டிருந்தார்.. தமிழகத்தில் நிஜமான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று அதிமுகவை முந்திக்கொண்டு, இப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும் சொல்லி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவை நாங்கள் எதிர்க்கட்சியாகவே பார்க்கவில்லை என்றும், தனித்து நின்றால் ஒரு சீட்டில்கூட, ஜெயிக்க முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தந்துள்ள பதில், டெல்லியையும் சேர்த்தே திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+