Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊருக்கு போறீங்களா.. "டபுள் சிக்ஸர்" அடித்த தமிழக அரசு.. விரைவு பஸ்களில் வருது மாற்றம்.. என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களின் வசதிக்காக, போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய வசதியை பயணிகளுக்காக செய்ய போகிறது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

முன்பதிவு: குறிப்பாக, ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.

Excellent news by Tamil Nadu Transport Dept and Rexin cover instead of fabric on gov express Bus Seats

இதைத்தவிர, பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

எக்ஸ்பிரஸ்: இதுபோல இன்னும் பல வசதிகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், அரசு விரைவு பஸ்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய நகரங்களுக்கு தினமும், 1,080 டீலக்ஸ், "AC" வசதி எக்ஸ்பிரஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.

ஆனாலும், எக்ஸ்பிரஸ் பஸ்களின் இருக்கைகளின் மேற்பகுதி அசுத்தமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தபடி இருந்தனர்.. இதற்காகத்தான், பஸ்களின் இருக்கைகளில் போடப்பட்டு இருக்கும் துணி கவர், ரெக்சின் கவராக மாற்றப்படுகிறதாம்..

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, விரைவு பஸ்களின் இருக்கையில் போடப்பட்டு இருக்கும் துணி கவர்களில், தண்ணீர், டீ, காபி, நொறுக்கு தீனி பொருட்களை வைப்பதால், அந்த இடமே கறையாகி விடுகிறது.. அழுக்கு தேங்கிவிடுகிறது.. பராமரிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால்தான், இப்போதுள்ள துணி கவர்களை எல்லாம் மாற்றவிட்டு, ரெக்சின் கவர்களை பொருத்த உள்ளோம்.

சொகுசு பயணம்: பயணியர் சொகுசாக பயணம் பயணம் செய்யும் வகையில் மாற்றியமைத்துள்ளோம்... இதனால், சுத்தப்படுத்துவதும் எளிமையாக இருக்கும். தற்சமயம், ஒரு சில விரைவு பஸ்களில் மட்டுமே ரெக்சின் கவராக மாற்றி உள்ளோம். இன்னும் மெல்ல மெல்ல அனைத்து விரைவு பஸ்களிலும் இதேபோல் மாற்றப்படும்" என்றனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+