Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயா அழகிரி "டெல்லி" போறாரா?.. அழகிரி பட்ட பாடெல்லாம் வீண் போகல.. போனை போட்ட ஸ்டாலின்.. மலர்ந்த மதுரை

முக அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் சிறப்புடன் கொண்டாடினார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முக அழகிரி ஆதரவாளர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.. மதுரை மாநகரில் இவர்கள் ஒட்டி உள்ள போஸ்டர்கள், திமுகவின் ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்பி வருகிறது.. என்ன காரணம்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை, நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.

இதுகுறித்து அப்போது உதயநிதி சொல்லும்போது, "அமைச்சராக பதவியேற்ற பிறகு, என்னுடைய பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன்... பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை ஆசிர்வதித்தனர்... மனநிறைவோடு வாழ்த்தினர்" என்றார்..

சந்தோஷம்

சந்தோஷம்

அதேபோல அழகிரி சொல்லும்போது, "தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன்தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்தபோது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சந்தோஷம் என்னுடைய தம்பி முதல்வராக இருப்பது, மகன் அமைச்சராகி உள்ளார்" என்று அழகிரி நெகிழ்ந்து கூறியிருந்தார்.. இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக திமுகவில் மகிழ்ச்சியை உண்டாக்கியது... அதேசமயம், சில ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.

கோபாலபுரம்

கோபாலபுரம்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, எத்தனையோ முறை ஸ்டாலின், மதுரை செல்ல நேர்ந்தது.. ஒவ்வொரு முறை மதுரை செல்லும்போதெல்லாம் அழகிரியை சந்திக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டன.. ஆனால், ஒருமுறைகூட சந்திப்பு நடக்கவில்லை.. மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் அழகிரி கோபாலபுரம் வரும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோபாலபுரம் வீட்டிலேயே, இருவரும் சந்தித்து கொள்ளாத தருணங்கள்தான் நடந்தன. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது ஆனால் அவர் வரவில்லை.
ஆனால், திடீரென அழகிரியை, உதயநிதி சந்தித்ததற்கு சில யூகங்கள் வலம்வந்தன..

வெங்கடேசன்

வெங்கடேசன்

அதன்படி, ஒருவேளை உதயநிதியை முதலில் அழகிரியிடம் அனுப்பிவைத்துவிட்டு, அதன்மூலம் தன்னுடைய ஆதரவையும் நெருக்கத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்த முயன்றிருக்கலாம் என்றார்கள்.. அதுமட்டுமல்ல, கடந்த முறை மதுரை தொகுதிக்கு திமுகவிலேயே எத்தனையோ நபர்கள் முயன்றார்கள்.. ஆனால், கடைசி நேரத்தில், கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக சீட் ஒதுக்கிவிட்டது. துணை மேயர் பதவியையும் எம்பி வெங்கடேசன் ஆதரவாளருக்கே பெற்று தந்துவிட்டதாகவும் ஒரு பேச்சும் உள்ளது.. ஏற்கனவே மதுரை திமுக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடிவரும் நிலையில், மீண்டும் மதுரையை அழகிரி தரப்பினர் கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் திமுக மேலிடம் நினைக்கிறதாம்..

எம்பி சீட்

எம்பி சீட்

இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வருகிறதாம்.. அதனால்தான், அழகிரியை சந்திக்க உதயநிதி நேரில் வந்ததுமே, அழகிரியின் ஆதரவாளர்களும் குஷியானார்கள்.. காரணம், எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால், அது தென்மண்டல திமுகவுக்கு பலத்தை பெற்றுதரும் என்றும், தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், என்று நம்பி உள்ளனர்.. மதுரை தொகுதியில் தயாஅழகிரிக்கு எம்பி சீட் வழங்கப்பட்டாலும், அதுவும் தங்களுக்கு பிளஸ் ஆக அமையும் என்று கணக்கு போட்டு வருகிறார்கள்..

பூரித்த அழகிரி டீம்

பூரித்த அழகிரி டீம்

இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்வர் ஸ்டாலினும் மதுரை வரும்போது, நிச்சயம் அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் இருந்தது... இந்தநிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்... அப்போது அவர் அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதன் காரணமாக அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முறையும் ஸ்டாலின் அழகிரி வீட்டுக்கு செல்லவில்லை.. அதுமட்டுமல்லட, மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படவும் தயாரானார்.

மலர்ந்த மதுரை

மலர்ந்த மதுரை

அந்த சமயத்தில், அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதல்வர் ஸ்டாலின், அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.. அப்போது அவர் அழகிரியின் நலம் குறித்தும் விசாரித்திருக்கிறார்.. அதேபோல அழகிரியும், ஸ்டாலினிடம் நலம் விசாரித்துள்ளார். 2 பேருமே 5 நிமிடங்கள் போனில் பேசியதாக கூறப்படுகிறது.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், இப்போது முதல்வர் ஸ்டாலினும் அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும், ஒரு எம்பி பதவி, அழகிரி குடும்பத்துக்கு நிச்சயம் என்று பூரித்து சொல்கிறார்களாம் அவரது ஆதரவாளர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+