நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செயல்பாடு! டாப் 3 எம்.பி.க்கள் லிஸ்டில் புதுக்கோட்டை அப்துல்லா!
சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறப்பாக பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. புதுக்கோட்டை அப்துல்லா இடம் பிடித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி-க்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

அந்த நிறுவனத்தின்'ப்ரீசென்ஸ்' இணைய இதழும் சேர்ந்து சிறந்த எம்.பி-களுக்கான 'சன்சத் ரத்னா' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்பிய விவாதங்கள், கலந்து கொண்ட விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், எழுப்பிய கேள்விகள், வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்ட சிறந்த செயல்திறன் கொண்ட எம்.பி-களை 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.
அந்த வகையில் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி எம். முகமது அப்துல்லா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

மக்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-க்கள் விவரம் வருமாறு;
1. சுப்ரியா சுலே - தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா
2. ஸ்ரீரங் அப்பா பார்னே - சிவசேனா - மகாராஷ்டிரா
3. பித்யுத் பரன் மஹதோ - பா.ஜ.க - ஜார்கண்ட்
மாநிலங்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-க்கள் விவரம் வருமாறு;
1. டாக்டர் யாஜ்னிக் அமீ ஹர்ஷத்ரே - காங்கிரஸ் - குஜராத்
2. எம். முகமது அப்துல்லா - திமுக - தமிழ்நாடு
3. டாக்டர் ஃபௌசியா தஹ்சீன் அகமது கான் - தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா












Click it and Unblock the Notifications