தயாளு அம்மாள் கன்னத்தில்.. அழுத்தி முத்தம் தந்த ஸ்டாலின்.. செல்வி முகத்தில் பூரிப்பை பார்க்கணுமே..!

தயாளு அம்மாள் கன்னத்தில் முதல்வர் ஸ்டாலின் முத்தம் தந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் கோபாலபுரத்து போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?

Recommended Video

    முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் DMK Government.. மனம் குளிர முதல்வர் Stalin அறிவிப்பு

    10 ஆண்டுகள் கழித்து திமுக அபார வெற்றி பெற்றது.. இதையடுத்து, அடுத்த முதல்வர் முக ஸ்டாலின் என்ற குஷியில் திமுகவினர் கொண்டாடி கொண்டிருந்தனர்.

    முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு, தன் அம்மா தயாளு அம்மாளிடம் ஆசி பெற சென்றார் முக ஸ்டாலின்.. கருணாநிதி இறந்தபிறகும்கூட, தான் வாழ்ந்த அதே வீட்டில் தான் மனைவி தயாளு அம்மாள் உள்ளார்.

    கோபாலபுரம்

    கோபாலபுரம்

    அன்றைய தினம், மனைவி துர்காவுடன் சென்றார் ஸ்டாலின்.. அப்போது வாசலிலேயே கருணாநிதியின் மகள் செல்வி வரவேற்றார்.. ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தேங்காயில் சூடம் ஏற்றியும் சுற்றினார்கள்.பிறகு தயாளு அம்மாவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், துர்காவுடன் எதிர் வீட்டுக்கு சென்றார்... சில நிமிடங்கள் அந்த வீட்டில் இருந்தவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு காரில் ஏறி சென்றனர்.. இப்போது என்றில்லை, தன் பிறந்தநாள், தேர்தல் உட்பட கட்சியின் முக்கிய நிகழ்வுகளின்போது, அம்மாவிடம் ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின்.

    விபூதி

    விபூதி

    அன்று செயல்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கலுக்கு முன்புகூட, தயாளு அம்மாவிடம் ஆசி வாங்கினார்.. அப்போது ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் நெற்றியில் விபூதி வைத்து ஆசீர்வாதம் தந்து அனுப்பி வைத்தார் தயாளு அம்மாள்.. அந்த வகையில்தான் இன்று ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.. முக ஸ்டாலின் முதல்வராக பொறப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

     முத்துவேல் கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் .. என்று சொல்லி பதவியை ஏற்று அரியணையில் அமர்ந்து சிறப்பாகவே ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளார் ஸ்டாலின்... யாராலும் அவ்வளவாக விமர்சிக்க முடியாத அளவுக்கு, ஓரளவு பாசிட்டிவான விஷயங்கள்தான் ஆட்சியில் நடந்துள்ளது... மற்றொரு புறம் இந்த ஒரு வருடத்தில் ஸ்டாலின் கொண்டு நல்ல திட்டங்களை திமுகவினர் லிஸ்ட் போட்டு பாராட்டி வருகிறார்கள்.

     கன்னத்தில் முத்தம்

    கன்னத்தில் முத்தம்

    இந்த நேரத்தில் சோஷியல் மீடியாவில் வைரலாகும் அந்த போட்டோவில், முதல்வர் ஸ்டாலின் தயாளு அம்மாள் கன்னத்தில் ஸ்டாலின் முத்தம் தருகிறார்.. சகோதரி செல்வி, மனைவி துர்கா, துரைமுருகன் உள்ளிட்டோர் இதை பக்கத்தில் நின்றுகொண்டே மகிழ்ந்து பூரித்து போய் பார்க்கிறார்கள்.. இது எப்போது எடுத்த போட்டோ என்று தெரியவில்லை.. முதல்வராக பொறுப்பேற்ற சமயமாக இருக்கலாம் என்கிறார்கள்..

     சிலிர்த்து போன திமுகவினர்

    சிலிர்த்து போன திமுகவினர்


    எனினும் இன்றைய தினம் மிக முக்கியமான தினம் என்பதால், இந்த போட்டோவை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள். வழக்கமாக ஆசி வாங்குவதுபோல் அல்லது தயாளு அம்மாள் பக்கத்தில் நிற்பது போல பல போட்டோக்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், கன்னத்தை பிடித்து அம்மாவுக்கு முத்தம் தரும் போட்டோவை பார்த்ததுமே திமுகவினர் சிலிர்த்து பேய்விட்டனர்.. இந்த போட்டோ இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+