பெரிய "கை" யை அசால்ட்டா தூக்கிய விஜய்.. எடுத்ததுமே பஞ்சாயத்து.. மொத்த கட்சியும் வேடிக்கை பார்க்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் கட்சியில் ஆரம்பமே குழப்பமாகவும், சர்ச்சையாகவும் வெடிக்க துவங்கி உள்ளது. இப்போதும் அதுகுறித்த ஒரு ஸ்பெஷல் தகவல்தான் நமக்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.. இந்த கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பெயரில் சிறு "கரெக்‌ஷனும்" நடந்தது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதுமே, தன்னுடைய கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்திருக்கிறார்.
விஜய் கட்சி: இந்த முறை எம்பி தேர்தலுக்கு போட்டியிடாத நிலையில், சட்டசபை தேர்தலை மையப்படுத்தியே விஜய்யின் அரசியல் நகர்வதாக தெரிகிறது.. இதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பமாகி உள்ளாம். முக்கியமாக, கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளாராம்.

Excellent political analyst Prasanth Kishore and what did Bussy Anand say about Vijay Tamizhaga vetri kazhagam Political Advisor

ஆனால், விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பேயே அதாவது, கடந்த வருடமே, தன்னுடைய கட்சியின் திட்டங்கள் உட்பட அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் வியூகம் வகுக்க ஆலோசகரை நியமிக்க போவதாக தகவல்கள் பரபரத்தன.

ஆலோசகர் யார்: அந்த "அரசியல் புலி" ஏற்கனவே தேசிய அளவிலான கட்சிகளுக்கு வியூகம் அமைத்து தந்தவர் என்றும், அவர் வியூகங்கள் அமைத்து தரும் கட்சியே, அப்போதைய தேர்தலில் பிரதான வெற்றியை பெறும் என்பதால், அந்த விஐபி-யையே தன்னுடைய கட்சிக்கும் ஆலோசகராக விஜய் நியமிக்க போவதாக செய்திகள் கசிந்தன.
கட்சியை நிர்மாணிப்பது முதல் பூத் கமிட்டி வேலைகள் வரை அவரை வைத்தே துவங்கப்போவதாகவும் சொன்னார்கள். ஆனால், அந்த விஐபி யார் என்று மட்டும் பெயர் வெளியாகாமலேயே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி.கே. பேட்டி: ஆனால், இப்படி ஒரு தகவல் வெளியானதுமே, இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன். ஆனால் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த பேட்டிதான், மிகுந்த பரபரப்பையும், விஜய் கட்சிக்குள் குழப்பம் மிகுந்த சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த கூடுதல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.

செம டென்ஷன்: பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னதுமே, செம டென்சனாகியிருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் !

விஜய்க்கும் கட்சிக்கும் முழு நேர தேர்தல் வியூக வகுப்பாளர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டாராம். இது பிரசாந்த் கிஷோருக்கும் தெரியுமாம்.. அப்படி தெரிந்தும், விஜய்க்கு தேர்தல் வியூக பணி செய்யமாட்டேன்னு ஏன் அவர் சொல்லனும் ? இதெல்லாம் குட்டையை குழப்புற வேலை.

உண்மை என்ன: அதே மாதிரி கட்சிக்கு ஆலோசகர்னு யாருமே நியமிக்கப்படவில்லை. ஆனால், அவர நியமிச்சிருக்காங்க, இவரை நியமிச்சிருக்காங்கன்னு செய்திகளை பொய்யாக பரப்புறாங்க. விஜய்யின் அரசியலை முடக்கவும் கான்ட்ராவெர்சியை உருவாக்கவும் உளவுத்துறையும் பிரசாந்த் கிஷோவும் பண்ற வேலை இது" என்று செம காட்டமாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம் புஸ்சி ஆனந்த்.. ஆனால் இதில், உண்மை என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+