சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஞ்சிட்டாரே.. கருணாநிதி, ஸ்டாலினையே ஓவர்டேக் செய்து.. ஜஸ்ட் 19 மாசத்திலேயே அமைச்சராகும் உதயநிதி..!

19 மாதங்களிலேயே அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் என பூரிக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பொறுப்பேற்று, அடுத்த 19 மாதங்களிலயே அவரை தேடி அமைச்சர் பதவி வரஉள்ளது, திமுக தொண்டர்களை உற்சாகத்தில் திளைக்க செய்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமல்லாது, தமிழகம் முழுக்கவும் சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது.. அதுமட்டுமல்ல, திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்ததை மறுக்க முடியாது.

பக்கம் பக்கமாக பேசாமல், அறிக்கைகளை விடாமல், பாயிண்ட் பாயிண்ட்டாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்காமல், இயல்பாகவும், கேஷூவலாகவும், எதிர்தரப்பு விமர்சித்து உதயநிதி செய்த விமர்சனம் பல தரப்பு மக்களையும் கவர்ந்தது.

 இரவு நடந்து சென்ற ஜோடியிடம் அத்துமீறி தொல்லை! கதறி அழுத மனைவி! அடாவடி பெங்களூர் போலீசார் மீது ஆக்ஷன் இரவு நடந்து சென்ற ஜோடியிடம் அத்துமீறி தொல்லை! கதறி அழுத மனைவி! அடாவடி பெங்களூர் போலீசார் மீது ஆக்ஷன்

செங்கல்

செங்கல்

சில இடங்களில் பேசாமலேயே, ஒரே ஒரு செங்கல்லை உயர்த்தி காட்டியே தன் பிரச்சாரத்தை அசரடித்தார்.. சொந்த் தொகுதியில் இவர் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள் பலரையும் வியக்க வைத்தது.. ஒருநாள் திடீரென, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று பிறந்தநாள் கோரிக்கையாக முன்வைத்தார்.. இவரை தொடர்ந்து அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கேஎன்நேரு, சேகர் பாபு போன்றோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித் தவந்தனர்.

போஸ்ட்டிங்

போஸ்ட்டிங்

சமீபத்தில்கூட அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் போன்றோரும் இந்த கருத்தையே சொல்ல, தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.. கருணாநிதி பிறந்த நாள் அன்றே, உதயநிதிக்கு அமைச்சர் போஸ்டிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. பிறகு, மே 7ம் தேதி அன்று திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆன நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகின.. எல்லாமே யூகங்களாக வெளிவந்தநிலையில், தற்போது, உதயநிதி அமைச்சராவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

கருணாநிதி

கருணாநிதி

வரும் டிசம்பர் 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களிலேயே அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்..

ஜஸ்ட் 19 மாதம்

ஜஸ்ட் 19 மாதம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.. ஆனால், 10 ஆண்டுகள் கழித்துதாதன், அதாவது 1967ம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.. அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 வருடங்கள் கழித்துதான், அதாவது 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். அப்போது அவருக்கு உள்ளாட்சி துறை வழங்கப்பட்டது. ஆனால், உதயநிதியோ, ஸ்டாலினையும், கருணாநிதியையுமே இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்து, ஜஸ்ட் 19 மாதங்களிலேயே அமைச்சராவது, உடன்பிறப்புகளை பூரிப்புக்கு உண்டாக்கி வருகிறது..!!

English summary
Excellent posting: udhayanidhi faster than DMK karunanidhi and MK stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X