Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைக்கிள்கேப்பில் "சிக்ஸர்" அடித்த ஏ.ஆர். ரஹ்மான்.. பள்ளிவாசலில் தாலி கட்டிக்கொண்ட "இந்து" பெண்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஒரு வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு சென்று, ஆதரவையும், வாழ்த்தையும், பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..!!

விபுல் ஷா தயாரிப்பில், டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'தி கேரளா ஸ்டோரி'.. இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது.

Excellent video and kerala story row ar rahman shares fantastic video of hindu wedding in mosque

இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்து பெண்களை, மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. அதனால் படத்தை தடை செய்யக் கோரி கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது... மனுவை விசாரித்த நீதிபதிகள் நகரேஷ் மற்றும் சோபி தாமஸ் தலைமையிலான அமர்வு, படத்தை திரையிட தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்து விட்டது..

தீர்ப்பு விவரம்: "ஒரு படத்தை திரையிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது... படத்தின் டீசர் கடந்த நவம்பரில் வெளியானது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாக தான், திரைப்படம் சொல்கிறது.. படத்தில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்கள் எதுவும் இல்லை. படத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை... ஐஎஸ்ஐஸ் அமைப்புக்கு எதிராகத்தான் கருத்துக்கள் இருக்கின்றன.. கேரள சமூகம் மதச்சார்பற்ற தன்னை கொண்டது. ஏற்கனவே, இந்து சாமியார்கள், கிறிஸ்துவ பாதிரியார்களை விமர்சித்து படங்கள் பல வந்திருக்கின்றன.. அதையெல்லாம் கதைகளாக பார்க்கும்போது, இதில் மட்டும் என்ன பிரச்னை?" என்று நீதிபதிகள் அந்த தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும், இந்த படத்துக்கு எதிரான எதிர்ப்பு குரல்களும், கண்டன குரல்களும் நாலாபக்கமுமிருந்து வெடித்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், காம்ரேட் ஃபரம் கேரளா என்ற ட்விட்டர் முகவரியில் வீடியோ ஒன்று சமீபத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்: "இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி" என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோ.. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து தம்பதியருக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது... அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.. அதில், "மனிதகுலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்" என்ற வலிய கருத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும், ரஹ்மானின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

இதுதான் எங்கள் இந்தியா: இங்கு நாம் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. இன்றைய தினம், மதுரையில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.. இந்த காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துவிட்டனர்.. அந்த பக்தர்கள் அனைவருக்கும், இஸ்லாமியர்கள் மோர், ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்கள்.. பண்பாட்டு பாரம்பரியமிக்க இந்து திருவிழாவில், இஸ்லாமியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு பக்தர்களின் பசி, தாகத்தை தீர்க்க, ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை வைத்து விநியோகித்தனர்.. திருவிழாவில் பங்கேற்ற அத்தனை பக்தர்களும் இதை பார்த்து நெகிழ்ந்து விட்டார்கள்..!!

எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சிலர்கள் கட்டவிழ்த்துவிட்டாலும்.. ஈரம் கசியும் மனசுகள் இருக்கும்வரை.. சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த பள்ளிவாசல் - இந்துமத திருமணம் நாட்டுக்கு பறைசாற்றி உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+