₹300 "நடுக்கம்".. அதைவிடுங்க.. நம்பர் 1 புள்ளியே இவர்தான்.. சட்டென கவனிக்கும் கட்சிகள்.. அட ஆறுமுகம்

மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் ஆறுமுகம் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் பலரையும் கவனிக்க வைத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. வேட்பாளர் ஆறுமுகம்தான் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.. என்னவாம்?

விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார்.. மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர்.
அதேபோல, தேர்தல் சமயங்களில் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர்.. அதன் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் இவர் எப்போதுமே கவலைப்பட்டவர் கிடையாது.

 கொம்பன்

கொம்பன்

"கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்... ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது" என்று ஒவ்வொருமுறையும் முழங்கி வருபவர்.. அதேபோல, மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஒவ்வொரு முறை தேர்தல் சமயங்களிலும், தேர்தல் அறிவிப்புகளாக வெளியிட்டு வருபவர்.. அதுமட்டுமல்ல, அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சவால் விடுத்தவர்.

 நம்பர் 1

நம்பர் 1

இப்போதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்கியுள்ளது. அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.. வழக்கம்போல், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்து, அதன்மூலம் டெபாசிட் தொகுதியை செலுத்தினார்கள். மதுவால் பல குடும்பங்கள் நாசமாவதை சுட்டிக்காட்டும் விதமாக, எல்லா தேர்தல்களிலும் போலவே இந்தமுறையும், வெள்ளை புடவை அணிந்து, தலைவிரி கோலத்திலும், விதவை கோலத்திலும், கையில் மஞ்சள் தாலி கயிறுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆறுமுகம்..

 டாஸ்மாக் செங்கல்

டாஸ்மாக் செங்கல்

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் என்னுடைய மனுவை நான் வாபஸ் பெறுவேன்" என்றும் ஆறுமுகம் அதிரடியாக அறிவித்திருந்தார்.. "டாஸ்மாக் செங்கல்" சுமந்தும், பிணக்கோலத்திலும் தொகுதி மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தனர்.. "பகுத்தறிவு மண்ணிலே பணமழை பொழிகிறது, பாட்டில் அலை வீசுகிறது, பரிசுகள் பல குவிகிறது, பத்திரிகையாளர் முகம் வீங்குகிறது, இதற்கெல்லாம் பாராமுகம் காட்டும் தேர்தலை கண்டித்து முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஓட்டுக் கேட்டு வந்தார் வேட்பாளர் ஆறுமுகம்" என்ற கோஷத்துடன் ஈரோடு தொகுதியில் இச்சங்கத்தினர் வலம் வந்தது அம்மக்களின் கவனத்தை ஈர்த்தது.

 ஸ்வீட் பாக்ஸ்கள்

ஸ்வீட் பாக்ஸ்கள்

இப்போது விஷயம் என்னவென்றால், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டதற்கான செலவுத்தொகையை இந்த சங்கம் கணக்கு காட்டி உள்ளது.. அத்துடன் அதை போஸ்டர் அடித்தும் பகிரங்கமாக ஒட்டியிருக்கிறது. இந்த தொகுதியில் ஏகப்பட்ட "ஸ்வீட் பாக்ஸ்கள்" பரிமாறப்பட்டதாகவும், பரிசு மழையும், பண மழையும் பொழிந்து கொண்டே இருந்ததாகவும் நிறைய புகார்கள் வெடித்த வண்ணம் இருந்தன.. அதாவது அந்த 2 கட்சிகளும் குறைந்தபட்சமாக தலா 300 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்திருப்பதாகவும் பல்வேறு செய்திகள் சோஷியல் கிளம்பி வருகின்றன.

 ஆறுமுகம் அலர்ட்

ஆறுமுகம் அலர்ட்

இந்த நிலையில்தான், அங்கு போட்டியிட்ட மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் வேட்பாளர் ஆறுமுகம் தன்னுடைய தேர்தல் செலவு கணக்கை காட்டி உள்ளார். அதில், தனக்கு ரூபாய் 27 ஆயிரத்து 500 செலவாகி உள்ளதாக செலவு கணக்கு வெளியிட்டுள்ளதுடன், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் உளமார நன்றி தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்குப்பதிவு நாள் வரையிலுமாக இந்தத் தொகை செலவாகி உள்ளதாகவும், இதில் 8 பேரிடமிருந்து 9,500 ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளது. மீதத்தொகை மட்டுமே தனது சொந்த தொகை என்றும் ஆறுமுகம் அதில் தெரிவித்துள்ளார்.

 நம்பர் 1 புள்ளி

நம்பர் 1 புள்ளி

இவ்வளவு தூரம் பொழிந்த பரிசு மற்றும் பணமழையையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய டம்ளர் சின்னத்தில் வாக்களித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஆறுமுகம் போஸ்டரையும் அந்த தொகுதியில் ஒட்டி உள்ளார். இந்த தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டன.. ஆனால், எடுத்த எடுப்பிலேயே முதல் நபராக வேட்பாளரை அறித்தது இந்த மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்தான்.. அதேபோல தேர்தல் செலவை காட்டி போஸ்டர் அடித்து ஒட்டிய முதல் நபரும் ஆறுமுகம்தான்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+