"நொறுங்கிடுச்சே".. ஸ்டாலின் பேசிட்டே இருக்கும்போது.. மயிலாப்பூருக்குள் நுழைந்த துர்கா.. சபாஷ் திமுக
இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என பாஜக தொடர் விமர்சனங்களை முன்வைக்கிறது
சென்னை: இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்று தமிழக பாஜக தொடர் விமர்சன கணைகளை வீசிக் கொண்டிருந்தால், அதற்கு சளைக்காமல் பதில் அளித்து விளக்கம் தந்து வருகிறது திமுக..!!
திமுகவை பொறுத்தவரை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகவே பாஜகவினரால் கட்டமைக்கப்பட்டு வருகிறது.. ஆனால், நாங்கள் இந்து மத எதிரிகள் இல்லை என்பதை திமுக தரப்பில் அனைத்து தலைவர்களுமே பலமுறை சொல்லிவிட்டார்கள்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்..

பிபி எகிறும்
அதில், "திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம், காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்றைக்கு சுக்கு நூறாக உடைத்திருக்கிறோம். இந்த திமுக ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பில் இருந்து 1789 கோடி ரூபாய் மதிப்புள்ள 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். கோவில் சீரமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு தமிழ்நாட்டைப் பார்த்தால் ரத்த அழுத்தம் (பிபி) ஏறத்தான் செய்யும். என்னடா, நாமும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம், அந்த மக்களுடைய ஒற்றுமையை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

திருமாவளவன்
அப்படி இருந்தும், தீபாவளிக்கு ஏன் திமுக வாழ்த்து சொல்லவில்லை என்று அடுத்த பிரச்சனையை இந்து மத அமைப்புகள் எழுப்பியிருந்தன.. இதற்கும், திமுக எம்பி ஆ.ராசா ஒருமுறை நெடிய விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. என்னும், திமுக மீதான இந்து மத வெறுப்பு பிரச்சாரத்தை, பாஜக தற்போது மேலும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.. ஒருமுறை திருமாவளவனும் இதுகுறித்து கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்..

காவி துண்டு
" 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தில் தான் கை வைப்பார்கள்.. தமிழ்நாட்டில், பிள்ளைகள் கையில் லேப்டாப் தருகிறோம், ஆனால் கர்நாடகாவில் காவி துண்டையும், ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை கற்றுத்தருகிறார்கள், இந்துக்களின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும்தான்.. இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இந்து மதத்துக்கு எதிராக பேசவில்லை, பிறகு ஏன் அவர்களை தாக்கச் சொல்கிறார்கள்? இந்துவாகப் பிறந்த அம்பேத்கரும், பெரியாரும் ஏன் இந்து மதத்தை குறை கூறினார்கள்? என்றெல்லாம் சிந்திக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

திருமாவளவன்
ஏற்கனவே ஒரு முறை, "இந்துக் கோவில்களை எல்லாம் இடித்துவிட்டு புத்த விகாரங்களையும், சமண மடங்களையும் கட்டிவிடலாமா" என்று திருமாவளவன் பேசியபோதே, அது விவகாரமாக வெடித்தது.. இதற்கு பிறகு மனுஸ்மிருதியை பற்றி திருமா பேசிய கருத்தும், அதற்கு கூட்டணியில் உள்ள திமுக காட்டிய மவுனமும், பாஜக மற்றும் இந்து மத கட்சிகளுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது.. தற்போதுகூட, இந்து மதம் சர்ச்சை தொடர்பாக, ஆ.ராசாவை பற்றி விமர்சிக்கும்போதெல்லாம், திருமாவளவனையும் பாஜகவினர் விமர்சிக்க தவறுவதே இல்லை..

சு.சாமி
இப்படி தொடர்ந்து திமுக & அதன் கூட்டணியும் விளக்கங்களையும், பதில்களையும், காரணங்களையும் அளித்து வந்தாலும், இந்து மதம் தொடர்பான சர்ச்சைகள் நீண்டு கொண்டே வருகிறது.. அதிலும் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வதை வைத்து சமீபகாலமாகவே பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பு, மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு பேட்டி தந்திருந்தார்..

ஃபோட்டோக்கள்
தற்போதுகூட, துர்கா ஸ்டாலினையே முன்வைத்து, பாஜகவினர் திமுகவை சீண்டி வருகிறார்கள்.. துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர்.. அதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்... அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். உடனே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் கூடவே எழும் என்பதை மறுக்க முடியாது.

பாலாஜி ஹசன்
அதேசமயம், துர்கா ஸ்டாலின் தான் கோயிலுக்கு செல்வதை இதுவரை மறைத்தது கிடையாது.. அவ்வளவு ஏன், ஜோதிடர் பாலாஜி ஹசனை சந்தித்ததையும் அவர் மறைக்கவில்லை.. அது அவரது நம்பிக்கை.. பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் ஒருபோதும் வருவது கிடையாது என்பதுதான் வாழ்வின் யதார்த்தம் என்றாலும், சமீபகாலமாகவே, இந்து மதத்துக்கு எதிரானது திமுக என்ற இந்த சலசலப்பு பாஜகவில் அதிகமாகி வருகிறது.

வள்ளலார்
நேற்றையதினமும் வள்ளலார் விழாவில், முதல்வர் ஸ்டாலின் ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்று சிலர் பரப்பி வருகிறார்கள்... திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது கிடையாது.. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. ஆன்மீகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வை கற்பிக்க மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு எதிரானது இந்த, திராவிட மாடல் திமுக ஆட்சி" என்றார்.

பூரிப்பு + சபாஷ்
இப்படி ஒரு பேச்சை முதல்வர் ஸ்டாலின் பேசி கொண்டிருக்க, மறுபக்கம் சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்.. வழக்கமாக துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது இயல்பு என்றாலும், நேற்றைய தினம் இந்த இரு சம்பவமும் திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.. இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை என்பதை வெறுமனே வார்த்தைகளாக போய்விடாமல், கோயிலுக்கு சென்று துர்கா ஸ்டாலின் நிரூபித்ததும், திமுக தரப்புக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாம்..

கை கொடுத்த துர்கா
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், மதரீதியான விஷயங்களை பாஜக கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், திமுகவுக்கு நெருக்கடிகளை தரவும், தர்மசங்கடங்களில் ஆழ்த்தவும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அனைத்துவிதமான யூகங்கள், சலசலப்புகள், வதந்திகள், சர்ச்சைகள், அதிருப்திகள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி அமைந்துவிட்டது, முதல்வர் ஸ்டாலினின் பேச்சும், அதற்கு கை கொடுத்து உதவிய துர்கா ஸ்டாலினின் செயல்பாடும் என்று பூரித்து போய் சொல்கிறார்கள் திமுகவினர்..!!

சலசலப்புகள்
அதனால்தான், முன்பைவிட இப்போதெல்லாம் முதல்வர் உட்பட திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவருமே பாஜகவுக்கு பதிலடிகளை சளைக்காமல் தந்து இருக்கிறார்கள்.. எனினும், திமுகவின் இந்து மத எதிர்ப்பு என்ற அனைத்துவிதமான யூகங்கள், சலசலப்புகள், வதந்திகள், சர்ச்சைகள், அதிருப்திகள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக அமைந்துவிட்டது, முதல்வர் ஸ்டாலினின் பேச்சும், அதற்கு கை கொடுத்து உதவிய துர்கா ஸ்டாலினின் செயல்பாடும் என்று பூரித்து போய் சொல்கிறார்கள் திமுகவினர்..!!
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications