EXCLUSIVE: சீமான் ஒரு சங்கி.. திமுக தந்த இலவசங்களை மோடி காப்பி அடிக்கிறார்.. ராஜீவ் காந்தி பேட்டி!
சென்னை: இலவச வாக்குறுதிகள் மற்றும் அதை சுற்றி வரும் சர்ச்சைகள் தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி ஒன்இந்தியா தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாஜக வழக்கறிஞர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு 3 நீதிபதி கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திமுக ரிட் மனு தாக்கல் செய்து மனு தாரராக சேர்ந்துள்ளது. இந்த வழக்கில் இலவச திட்டங்கள் தொடர்பான திமுகவின் நிலைப்பாட்டையும், பேச்சுக்களையும் , அறிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த நிலையில்தான் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி ஒன்இந்தியா தமிழ் ஊடகத்திற்கு இது பற்றி சிறப்பு பேட்டி அளித்தார்.
இலவசங்களை திமுக ஆதரிப்பது ஏன்? இலவச திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அடைந்த முன்னேற்றம் என்ன? ராஜீவ் காந்தி பேட்டியில் விளக்கமாக தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி பின்வருமாறு

ராஜீவ் காந்தி பேட்டி
கேள்வி: லவசங்கள் குறித்த விவாதம் நாடு முழுக்க உள்ளது.. இதில் அமைச்சர் பிடிஆர் பேச்சு அதீதமாக இருக்கிறதா?
பதில்: நீங்கள் சொல்கிற தொனியில்தான் உச்ச நீதிமன்றமும் பேசி இருக்கு. ஆனால் பிடிஆர் அதீதமாக பேசவில்லை. அவர் நியாயமாக பேசி இருக்கிறார். அவர் பேச வேண்டியதை பேசி இருக்கிறார். இந்திய சமூக 2000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது. மன்னர்கள் காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், நீதி கட்சி காலத்தில் எப்படி இருந்தது, திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். இலவசம் ஏன் முக்கியம் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எங்களுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசை ஒப்பிடுங்கள். இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்களே? என்ன செய்தீர்கள்? இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டதே? வறுமையை ஒழித்தீர்களா? எதன் அடிப்படையில் நீங்கள் எங்களுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள்? நீங்கள் சாதித்தது என்ன சொல்லுங்கள். நீதிபதியின் கேள்வி நியாயமானதா? இல்லையா? என்பதை தாண்டி அதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

அண்ணாவின் வாக்குறுதி
அவர்கள் தமிழ்நாட்டில் இலவசங்களின் நாடு என்று சொல்கிறோம். மூன்றுபடி லட்சியம், 1 படி லட்சியம் என்று வாக்குறுதி கொடுத்தது அண்ணா.. அப்படி என்றால் யானை கட்டி போரடித்தோம் என்று இலக்கியங்களில் இருக்கிறதே.. அந்த அரிசி, நெல் எல்லாம் யாரிடம் இருந்தது? அது எல்லாம் 5 சதவிகிதம் மட்டுமே இருந்த பண்ணையார்களிடம் மட்டுமே இருந்தது. பொது மக்களிடம் அரசி, நெல் இல்லை. அரிசி அவ்வளவு காஸ்ட்லி விஷயமாக இருந்தது. அதை மாற்றியது அண்ணாவின் வாக்குறுதி. ஆனால் பீகாரில் இப்போதும் அரிசி விலை உயர்ந்த பொருள்தான். அரிசியை ஜனநாயகப்படுத்தியது எங்கள் இலவசம்தான்.
நிலம் கொடுத்தது நாங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்று வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான். இதை அன்று இந்திராகாந்தி நாடு முழுக்க கொண்டு வர வேண்டும் என்று கூறினார். மோடி இப்போது இந்த திட்டத்தை பின்பற்றுகிறார். தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றியது இந்த திட்டங்கள்தான். அதனால் நாங்கள் திமிரோடதான் இருப்போம்.

பாஜக குற்றச்சாட்டு
கேள்வி: தண்ணீர், உணவு கொடுப்பதெல்லாம் அத்தியாவசியம்.. ஆனால் நீங்கள் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டு வைக்கிறதே?
பதில்: நாங்கள் தண்ணீர் கொடுத்தோம்.. நிலம் கொடுத்தோம். பொங்கல் காலங்களில் சில பொருட்கள் கொடுத்தோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை கொடுத்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தோம். அதன்பின் டிவி கொடுத்ததை ஆடம்பரம் என்று கூறுவார்கள். 80 களில் நாங்கள் டிவி பார்க்கக் 5 கிமீ செல்ல வேண்டும். ஆனால் இப்போது நான் இதே அறையில் டிவி பார்க்க முடியும். ஒரு காலத்தில் பணம் படைத்தவர்களிடம் மட்டுமே டிவி இருந்தது. பண்ணையார்களிடம் மட்டுமே டிவி இருந்தது. அதை பார்க்கக் சென்றால் கூட அவமானப்படுத்துவார்கள். அதை இலவச டிவி மாற்றி இருக்கிறது. இதில் உங்களுக்கு என்ன சிக்கல்? இவன் எல்லாம் ஏன் டிவி பார்க்கிறான் என்ற கேள்வி தானே உங்களுக்கு?
1956ல் கல்வி இலவசம் என்று அண்ணா கூறினார். அதை அப்போது கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதை அண்ணாவும், காமராஜரும் நிறைவேற்றி காட்டினார்கள். அதற்கு முன் கல்வி எல்லோருக்குமாக இருந்ததா? சொல்லுங்கள்.

சீமான் சங்கி
கேள்வி: அரசு கொடுத்த இலவச லேப்டாப் காரணமாக பலர் ஆன்லைன் ரம்மி ஆடுகிறார்கள், அதனால் பலர் மரணம் அடைந்தனர் என்று அர்ஜுன மூர்த்தி சொல்லி இருக்கிறாரே?
பதில்: இந்தியாவில் தினமும் பல நூறு விபத்துக்கள் நடக்கின்றன. அதற்காக கார்களை தடை செய்யலாமா? முட்டாள்த்தனமான வாதம் இது. பெண்கள் வேலைக்கு போவதால்தான் ஆண்கள் அவர்களை சீண்டுகிறார்கள் என்று வாதம் வைப்பவர்கள். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். சங்கராச்சாரியார்களை பின்பற்றும் நபர்கள் இப்படிதான் பேசுவார்கள்.
கேள்வி: பாஜகவை கடுமையாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி..
(கேள்வியை பாதியில் நிறுத்தி )பதில்: நாம் தமிழர் பாஜகவை எதிர்கிறதா? எங்கே எதிர்க்கிறது? பாஜகவை மேடையில் சில இடங்களில் அவர் எதிராக பேசுவார். ஆனால் பாஜகவின் திட்டங்களை அவர் எங்கே எதிர்த்து இருக்கிறார். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி. நான் தமிழரில் பயணித்தவன். சிஏஏவை மேடையில் எதிர்த்து பேசிவிட்டு, அதை மேடைக்கு கீழ் ஆதரித்து பேசியவர்தான் சீமான்.
சீமான் வெளியிடும் அறிக்கைகளில் 90 விழுக்காடு திமுகவை எதிர்த்து. 10 சதவிகிதம் மட்டுமே பாஜகவை எதிர்த்து பேசினார். பாஜக தவறு எதுவுமே செய்யவில்லையா? சீமான் ஏன் அதை எதிர்க்கவில்லை. ஆளுநர் பதவிக்கு ஆதரவாக ரஜினியை போலவே பேசுகிறார் சீமான்.
சீமான் மீது விமர்சனம்
கேள்வி: இலவசங்கள் தேவை இல்லை என்று சீமான் கூறுகிறாரே?
பதில் : அவருக்கு இலவசம் தேவை இல்லைதான். அவருக்கு மாதம் 5 லட்சம் வருகிறது. கட்சிக்காரர்கள் வசூல் செய்து கொடுக்கிறார்கள். அவருக்கு பணம் வருகிறது. நல்ல நிலைக்கு வந்துவிட்டார். ஒரு மூட்டை மிளகாயுடன் இளையான்குடியில் இருந்து வந்தவர் நன்றாக இருக்கிறார். ஆனால் அதே இளையான் குடியில் இருக்கும் மற்றவர்களும் முன்னேற வேண்டுமே? இலவசங்களால் மாநிலம் முன்னேறி இருக்கிறதா என்று கேட்கிறார் சீமான். இலவசங்கள் கொடுத்த தமிழ்நாடு பல துறைகளில் இலவசங்கள் கொடுக்காத குஜராத்தை விட முன்னேற்றம் அடைந்து இருக்கிறதே. உ.பி, பீகார் முன்னேறி இருக்கிறதா? சொல்லுங்கள்.
ராஜீவ் காந்தியின் முழு பேட்டியை மேலே உள்ள வீடியோவில் பார்க்கவும்
-
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications