தென் சென்னையில் "சூறாவளி"! தமிழச்சிக்கு இதுகூட தெரியலையே! ஜெயவர்தன் பொளேர்! அதிர்ச்சியில் திமுக
சென்னை: தென் சென்னை எம்பியாக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு இந்த விஷயங்கள் கூட தெரியாது என அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தென் சென்னை லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்தன் தனது சூறாவளி பிரச்சாரத்தின் போது, ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதிமுகவை பொருத்தமட்டில் களத்தில் எப்போதுமே தயாராகத்தான் இருக்கும். கடந்த ஓராண்டுக்கு முன்பே ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு பூத் பொறுப்பாளரை எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.
கோவை பொறுப்பாளர்: அந்த வகையில் நான் கோவையின் பொறுப்பாளராக இருந்தேன். இதுதான் அடிப்படையான விஷயம். இது வலிமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இந்த பணியை ஓராண்டுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டார். திமுக வேட்பாளர் தென்சென்னை மக்களுக்கு செய்த துரோகங்கள் என்ற ஹேஷ்டேக்கை நான் உருவாக்கி , அதில் தற்போதைய எம்பி செய்த துரோகங்களை 14 வீடியோக்களாக பதிவு செய்துள்ளேன்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் போது அதிமுக எம்பி இருப்பார்கள், அதிமுக அரசு அமையும், இப்படியாக சூழல்கள் மாறும். சும்மாவே செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் காட்டுவாரே தவிர, மக்களுக்காக போராட கூடிய குணம் திமுகவிடம் இல்லை. நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து என பொய்யான கட்டுக்கதைகளை சொல்லி அதன் மூலம் வாக்குகளை பெற்று மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.
ஏமாறமாட்டார்கள்: தற்போது மக்கள் ஏமாற தயாராக இல்லை. நம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டது இல்லாமல் போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இந்த லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒவ்வொரு பிரச்சாரத்திலும் மக்கள் எழுச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வென்று முதலில் நான் இளைஞராக சென்ற போது என்னிடம் மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. உதாரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நிறைய குப்பை கூளங்கள் இருந்தன. இதனால் ஒவ்வொரு முறையும் வெள்ளப் பாதிப்பில் பள்ளிக்கரணை தத்தளித்து வந்தது. இதனால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
பள்ளிக்கரணை: அப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக அப்போதைய அதிமுக அமைச்சர்களை சந்தித்து ரூ 1200 கோடி ரூபாய் அந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. அந்த 4 ஆண்டுகளுக்குள் அங்குள்ள குப்பைகள் எடுக்கும் பணிகள் நடந்தன. அதற்கு 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது. திமுக வேட்பாளர் வென்றார். அப்போது முதல் அந்த திட்டத்திற்கு சுணக்கம் ஏற்பட்டது. இதனால் இதுவரை 20 சதவீத குப்பைகள் மட்டுமே அகற்றப்பட்டன.
தமிழச்சி தங்கபாண்டியன்: சதுப்பு நிலம் என்றாலே என்னவென்றே தெரியாதவர்தான் திமுக எம்பியாக இருந்த தமிழச்சி. அந்த சதுப்பு நிலத்தில் பூங்கா அமைக்கவும் அருங்காட்சியகம் அமைக்கவும் திமுக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஒரு சதுப்பு நிலத்தில் கட்டடங்களை எழுப்பலாமா? பல இடங்களில் இருந்து வரும் மழை நீர், அங்கு தேங்கி அங்கிருந்து கடலுக்குள் செல்லும் ஒரு பகுதி. அது வெள்ளத் தடுப்புக்கான இயற்கை சூழல்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு இடம். இயற்கைக்கு எதிர்மாறாக திட்டங்களை வகுத்திருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்தான் தமிழச்சி தங்கபாண்டியன்.
2019 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் அளித்த வாக்குறுதியில் "இனி வரும் காலங்களில் வெள்ளம் பாதிக்காது" என்றார். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு வந்த மிக்ஜாம் புயலால் தென் சென்னையே வெள்ளக்காடானது. இவ்வாறு டாக்டர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications