இதுதான் வேக லிமிட்டா.. அப்படி போடு.. பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் சாலை போட்டோ இதுதான்.. மாஸ்
சென்னை: சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் exclusive புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். அதற்கு முன் உள்ள தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதற்கு முன்பாகவே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.
சாலை பணிகள் தீவிரம்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 1.15 லட்சம் கார் பயணம் செய்கிறது. இது பீக் ஹவர்ஸில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இங்கே பயணம் செய்கின்றன. இந்த பாலம் கட்டுமானம் முடிந்ததும் சுமார் 80 சதவிகித வாகனங்கள் இந்த பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை வளர்ச்சி: சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த சாலை எவ்வளவு தூரம் கட்டப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் 71 கிமீ பிரிவு - 87% நிறைவு
ஆந்திரப் பிரதேசத்தில் 85 கிமீ பிரிவு - 40% நிறைவு
தமிழ்நாட்டில் 106 கி.மீ பிரிவு - 55% நிறைவு
இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கிமீ 6 வழி எக்ஸ்பிரஸ் முழுவதையும் முடிக்க NHAI திட்டமிட்டுள்ளது.
வேகம் எடுக்கும் பணிகள்: சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications