Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் கட்சி தொடங்கணும்.. தேர்தலில் எடப்பாடியை தோற்கடிக்கடிச்சி நிரூபிக்கணும்.. எக்ஸ்பர்ட் ஆப்ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க வேண்டும். அப்போதுதான் அவரது செல்வாக்கை நிரூபிக்க முடியும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம்:

கேள்வி: அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாலும் அவருடைய அரசியல் பயணம் கிட்டதட்ட முடிவடைந்ததாக எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: அரசியலை பொருத்தமட்டில் யாருக்கும் என்ட் கார்டு போட முடியாது. எந்த சமயத்திலும் ஏதாவது ஒரு டர்னிங் பாயிண்ட் மூலம் அவர்கள் மேலே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் தீர்ப்பை பொருத்தமட்டில் ஓபிஎஸ்ஸுக்கு இது பின்னடைவுதான். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுகளில் பதிவாக வேண்டும்.

ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

ஆனால் ஓபிஎஸ் தரப்பு பொதுச் செயலாளர் பதவியை எதிர்த்தும் பொதுக் குழுவை எதிர்த்தும் கோர்ட்டுக்கு போய் கொண்டே இருந்தால் அந்த பதவி தேர்தல் ஆணைய பதிவுகளில் ஏறாது. இருவருக்கும் இடையே நீயா நானா போட்டி இருந்து பின்னர் முடிவுக்கு வரும். கட்சியும் ஆதரவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற ஓபிஎஸ் வரமாட்டார். அப்படியே அவர் வந்தாலும் கட்சியில் இபிஎஸ்ஸுக்கு இணையான பதவி அவருக்கு வழங்கப்படாது. எந்த நீதிமன்றமாவது ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர் என சொன்னாலும் அதை எடப்பாடி ஏற்க மாட்டார்.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

கேள்வி: ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டுவது போல் இதுவரை தீர்ப்பளித்த நீதிபதிகள் அதிமுகவின் பைலாவை பார்க்காமலேயே தீர்ப்பளித்துள்ளனரா

பதில்: நீதிபதிகள் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டுகிறது. அப்படியே இருந்தாலும் ஒரு நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு செல்வாக்கு இருந்தால், இன்னொரு பெஞ்சிலும் இருக்கும் என சொல்ல முடியாது. ஒற்றை நீதிபதி ஜெயசந்திரனை தவிர்த்து மற்ற அனைவருமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தனர்.

ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்

ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்

ஓபிஎஸ்ஸை எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி முடிவு செய்தார். ஆட்களை சேர்த்தார், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் பக்காவாக காய்களை நகர்த்தி இன்று பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். ஆனால் ஓபிஎஸ்ஸோ தனக்கு பின்னால் குழி தோண்டப்படுகிறது என்பதை கூட அறியாமல் இருந்துள்ளார். மேலும் இவரை விட்டு பல ஆதரவாளர்கள் இபிஎஸ்ஸிடம் போய்விட்டார்கள். நமக்கு ஆதரவாளர்கள் யார், குழி தோண்டுவோர் யார், ஆதரவாளர்கள் ஏன் நம்மை விட்டு சென்றார்கள், இதையெல்லாம் யோசிக்காமல் துணை முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டால் ஓபிஎஸ் அரசியலில் இந்த நிலையைத்தான் சந்திப்பார்.

நம்ப கூடாது

நம்ப கூடாது

யாரையும் நம்பக் கூடாது, பாஜக பின்னால் போனார். ஈரோடு தேர்தலில் பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் பெற வைக்கிறேன் என கூறியிருக்கவே கூடாது. போட்டி போட்டிருந்தால், சின்னம் முடங்கியிருக்கும். ஏதாவது ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கும். கலகம் பிறந்தால்தான் நன்மை என சொல்வார்கள்.

கேள்வி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியெல்லாம் காலாவதியாகவில்லை என ஓபிஎஸ் வாதம் முன் வைத்த போது பொதுக்குழு செல்லும் என நீதிபதி தீர்ப்பளித்தது எப்படி

பதில்: எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய ஹைகோர்ட் நீதிபதி துரைசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லுமா செல்லாதா என்பதை உரிமையியல் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கு. அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சொன்ன போதும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என ஹைகோர்ட் சொல்லிய போதும் நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பு எப்படியிருக்கும் என தெரிந்துவிட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி வலிமையாகவும் துடிப்பாகவும் இருப்பதை நீதிபதிகள் விரும்புவது தெரிந்தது.

நீதிபதிகளுக்கு ஏன் அக்கறை

நீதிபதிகளுக்கு ஏன் அக்கறை

கேள்வி: அதிமுக செயல்பட வேண்டும் என்ற விஷயத்தில் நீதிபதிகளுக்கு ஏன் அக்கறை?

பதில்: ஒரு கட்சிக்கு பொதுக் குழு என்பது முக்கியமானது. அது எடுக்கும் தீர்மானங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டிய தீர்மானங்கள். பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். பொதுக் குழு எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில்தான் கட்சி நடை போட வேண்டும் என்பதால் நீதிபதிகள் அது போல் சொன்னார்கள். மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறதோ அவர் தலைமையில் கட்சி நடக்கட்டும் என நீதிபதிகள் முடிவு செய்துவிட்டார்கள்.

சசிகலா வருவார்

சசிகலா வருவார்

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தால் அவரால் செயல்பட முடியாதே. ஓராண்டாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஒருவர் கூட விலகி ஓபிஎஸ் பக்கம் வரவில்லையே ஏன் என அந்த தரப்பு யோசிக்க வேண்டாமா? ஓபிஎஸ் வந்தால் சசிகலாவும் அதிமுகவிற்கு வருவார் என்பதால் கூட நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் நிற்காமல் இருக்கலாம்.

இபிஎஸ்ஸுக்கு இணையாக ஓபிஎஸ்ஸுக்கு இடம் இல்லை

இபிஎஸ்ஸுக்கு இணையாக ஓபிஎஸ்ஸுக்கு இடம் இல்லை

அதிமுகவில் இபிஎஸ்ஸுக்கு இணையாக ஓபிஎஸ் இனி செயல்பட முடியாது என்பதால் அவர் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களில் வென்றோ எடப்பாடி நிறுத்தும் வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்றோ நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஓபிஎஸ்ஸை சேர்க்குமாறு எடப்பாடியிடம் பாஜக சொல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஒரு வேளை எடப்பாடி மறுத்தால் பாஜக என்ன செய்யும், யாரிடம் கட்சி இருக்கிறதோ அவர் பக்கம் போவது சரி என ஓபிஎஸ் பிரச்சினையை விட்டுவிடும்.

 பாஜக என்ன நினைப்பார்கள்

பாஜக என்ன நினைப்பார்கள்

கேள்வி: ஓபிஎஸ்ஸிடம் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை எதற்காக அவரை ஆதரிக்க வேண்டும் என பாஜக நினைப்பார்கள் அல்லவா?

பதில்: கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் பின்னாடி இருந்தாலும் கூட கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. ஓபிஎஸ்ஸோ தினகரனோ தனியாக இருந்தார்களானால் தென் பகுதிகளிலோ டெல்டா பகுதிகளிலோ அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருப்பார்கள். பாஜக என்ன நினைக்கும் என்றால் தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் வெல்ல ஓபிஎஸ்ஸும் தினகரனும் தேவை என நினைப்பார்கள். அவர்களை அதிமுகவில் இணைக்க பார்ப்பார்கள். இவ்வாறு ப்ரியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+