Exclusive: பிரம்மாண்ட செட்.. கலர் கலர் அறைகள்.. மிளிரும் பிக்பாஸ் சீசன் 5 ஹவுஸ்.. வெளியான போட்டோஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Bigg Boss 5 Home Tour | Kamal Hassan, BB 5 Grand Launch

    சர்வதேச அளவில் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 வருடமாக தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது.

    இந்த நிலையில் 5வது சீசன் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

    புரோமோ

    புரோமோ

    இந்த சீஸனின் புரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது. கமல் பேசும் பல்வேறு புரோமோ வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இன்று இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். இதனால் அறிமுக நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீடு

    வீடு

    இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனுக்கான வீடு எப்படி இருக்கும் என்ற போட்டோஸ் வெளியாகி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக, புதிய தோற்றத்தோடு இந்த பிக்பாஸ் செட் இந்த முறை கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த வீடு ஒரு தீமை மையமாக வைத்து வடிவமைக்கப்படும்.

    பச்சை நிறம்

    பச்சை நிறம்

    இந்த முறை முழுக்க முழுக்க பசுமையை மையமாக வைத்து பச்சை நிறத்தில் வெளிப்பகுதியான கார்டன் ஏரியா வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்பக்கம் எகிப்தில் இருக்கும் கட்டுமானம் போல கலைநயத்தோடு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்தில் சுவர்கள் கொண்ட சோஃபா இருக்கை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. சுவற்றில் அழகான கலை நயத்தோடு சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    டைனிங் ஹால்

    டைனிங் ஹால்

    முன்பை விட இந்த முறை டைனிங் ஹால் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தினமும் போட்டியாளர்கள் எழுந்து பாடலுக்கு நடனம் ஆடும் கார்டன் ஏரியாவும் இந்த முறை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய 5 என்ற எண் ஐந்தாவது சீசனை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கமல் நின்றுக் கொண்டு பேசிய புரோமோவும் வெளியானது.

    கன்ஃபெஷன் அறை

    கன்ஃபெஷன் அறை

    கன்ஃபெஷன் அறையில் இந்த முறையில் நீல நிற சோஃபா அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு பின்பக்கம் மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை இறக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை வீடு முழுக்க பல இடங்களில் பீனிக்ஸ் பறவை இறக்கைகள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதிசயம்

    அதிசயம்

    அதேபோல் அதிசயமாக அண்டர் கிரவுண்ட் படுக்கை அறை ஒன்றும் இங்கே இடம்பெற்று இருக்கிறது. பெரும்பாலும் போட்டியின் போது பனிஷ்மென்ட் பெறும் நபர்கள் இங்கே தூங்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தற்போது போட்டோஸ் வெளியாகி உள்ள நிலையில் இன்று மாலை சீசன் தொடங்க உள்ளது. இந்த வீட்டின் புதிய தோற்றம், வடிவமைப்பு இப்போதே 5வது சீசன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+