சென்னை, மதுரை, கோவை.. மக்களின் பல வருட ஏக்கம்.. இந்த ஒரு போட்டோவை பாருங்க.. மனசு ஆறிடும்!
சென்னை: சென்னை, மதுரை மற்றும் கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட புதிய லோ ப்ளோர் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முதல் கட்டமாக அசோக் லேலண்ட் பேருந்துகள் அடுத்த மாதம் தமிழ்நாட்டில் ஓட உள்ளன.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நீல நிறத்தில் ஸ்டைலாக இருக்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன.

இதில் சென்னைக்கான பேருந்துகளை வாங்க, 500 தாழ்தள மின்சார பேருந்துகள் (400 Non A/C & 100 A/C) கொள்முதல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 3 ஏலதாரர்கள் தங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளனர்.
1. ஒலெக்ட்ரா
2. ஸ்விட்ச் மொபிலிட்டி (OHM குளோபல்)
3. ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல் ஆகியவை போட்டியில் உள்ளன.
பேருந்துகள்: சென்னை, மதுரை மற்றும் கோவை நகரத்தில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள், விரைவில் பயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும், வரும் மாதங்களில் 1552 தாழ்தள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.
இந்த வாகனங்கள் ஜெர்மன் அபிவிருத்தி வங்கியின் (KfW) நிதியுதவியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளின் லிஸ்ட் ஆகும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் வாங்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை இதே ஒப்பந்த முறைப்படி வாங்க உள்ளது. முழுமையாக கட்டப்பட்ட 552 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது, ஒரு வாரத்தில் KfW அதன் அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில், 442 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கு ஏலம் எடுத்தது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான தாழ்தளப் பேருந்துகளை வாங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டெண்டர் நிபந்தனைகளைப் பயன்படுத்தி, லோ-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்து 552 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.
புகைப்படங்கள்: இந்த பேருந்துகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெள்ளை நிறத்தில் முன் பக்கத்திலும், நடுவிலும் ஆட்டோமெட்டிக் டோர்கள் வைக்கப்பட்டு முழுக்க முழுக்க ஏசியோடு, ஏசி இல்லாமலும் இந்த பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
அதோடு புதிதாக டெண்டர் விடுவதைத் தவிர்க்கவும் முடிவு செய்தது. மொத்தம் உள்ள 1,107 பேருந்துகளில் தரமான தரைப் பேருந்துகளின் எண்ணிக்கையை 950 ஆகக் கட்டுப்படுத்தவும், 157 தாழ்தளப் பேருந்துகளை தனி டெண்டர் மூலம் வாங்கவும் நீதிமன்றம் துறைக்கு உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது.
KfW நிதியுதவியின் கீழ் 1,771 BS6 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கான மற்றொரு டெண்டர் விடப்பட்டது. இது சாதாரண பேருந்துகள் ஆகும். MTCக்கான 245 பேருந்துகள் உட்பட ஸ்டாண்டர்ட்-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கை இப்போது 1,614 ஆக உள்ளது. மீதமுள்ளவற்றில், TNSTC விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், TNSTC மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், TNSTC திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் கிடைக்கும்.
2024 ஏப்ரல் மாதம் இந்த பேருந்துகள் தமிழ்நாட்டு சாலைகளில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு முக்கிய அறிவிப்பு: இது போக தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகள் பொது-தனியார்-கூட்டு மாதிரியின் கீழ் இயக்கப்படும், அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும், நடத்துநர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு ஒரு கிமீ அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் புள்ளி B வரை மின்சார பேருந்துகளை இயக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 2026-ம் ஆண்டு முதல் புதிய டீசல் பேருந்துகள் வாங்குவதை நிறுத்தும் யோசனையுடன் தற்போதுள்ள டீசல் பேருந்துகளை எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், திட்டமிட்டபடி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்கள் சரியாக நடப்பதை பொறுத்தே இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெண்டர்: சென்னையில் பேருந்துகளை இயக்கி வரும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (எம்டிசி) 100 மின்சார பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியை KfW (ஜெர்மன் டெவலப்மென்ட் பேங்க்) மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ₹2 கோடி வழங்கும். டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications