இந்த போட்டோ பாருங்க.. பார்க்கவே சிலிர்க்குது! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நடந்த.. அசாத்திய மாற்றம்
சென்னை: கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா மற்றும் தொல்லியல் விளக்க மையம் பேருந்து முனையத்திற்கு அருகில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதை அசாத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் வெளியிட்டு உள்ளார். இது போக கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தை பேருந்து நிலையத்தோடு இணைக்கும் நடைபாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைபாலம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இதன் பணிகள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.
அதிகரிக்கும் எண்ணிக்கை: அங்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்கா செயற்கை நீர் வீழ்ச்சி, அலங்கார விளக்குகள், பூங்கா , நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் இடம் என்று அசத்தலான வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இதன் பணிகள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பாலம்: மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
பாலம் எப்படி இருக்கும்?: இந்த பாலம் சாதாரண நடைபாலமாக இருக்காது. மாறாக இது ராஜபாதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது
இந்த பாலத்தில் சிறிய சிறிய கியாஸ்க் வகை கடைகள் இருக்கும். மக்கள் அமர சீட்டிங் பே போன்ற இருக்காய் வசதிகள் இருக்கும். டிஜிட்டல் ஸ்கிரீனில் பேருந்துகள் செல்லும் பகுதிகள், நேரம், பிளாட்பார்ம் இருக்கும். அதேபோல் ரயில் மற்றும் பேரூந்துகளுக்கான டிக்கெட், முன்பதிவு கவுண்டர்கள் கூட இருக்கும்.
ரயில் நிலையம்: வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது. முதலில் இந்த வருடம் டிசம்பருக்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் மேற்கொள்ளும் வேகத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அடுத்த வருடம் ஜனவரியில்தான் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kilambakkam Climate Park & Archaeological Interpretation Centre spread over 15 Acres just beside the bus terminal… #Chennai #Parks 🌴🌳 pic.twitter.com/mdj5hBj2fP
— Chennai Updates (@UpdatesChennai) October 23, 2024
இந்த ஸ்டேஷனில் மொத்தம் 2 பிளாட்பார்ம் இருக்கும். ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க, இன்னொன்று லோக்கல் ரயில்கள் நிற்க. இதன் மூலம் இந்த ரயில்வே நிலையம் மல்டி மாடல் ரயில் நிலையமாக மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications