Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: பின்தங்கிய மாவட்டங்களை ‘மாஸ்’ ஆக்க பக்கா ஸ்கெட்ச்.. புட்டுப் புட்டு வைக்கும் ஜெயரஞ்சன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவரும், சமூக பொருளாதார அறிஞருமான ஜெ.ஜெயரஞ்சனிடம், நமது ஒன் இந்தியா சார்பில் பிரத்யேக நேர்காணல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெயரஞ்சன். ஜவுளி, தோல் இல்லாத காலணிகள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிகள் பற்றி விளக்கி உள்ளார்.

கேள்வி: கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு, ஜிடிபி வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இப்போதும், தமிழ்நாட்டின் கடைசி நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் கடைசி 10 மாவட்டங்களுக்கு என்ன திட்டம் உள்ளது?

Exclusive State Planning Commission VC J Jeyaranjan Discusses TN Govt s Development Plans for Backward Districts

ஜெயரஞ்சன்: கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளை அடிப்படையாக கொண்டு மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்களை அடையாளம் கண்டுள்ளோம். Focus block என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். எந்த விஷயத்தில் குறைபாடு இருக்கிறது என ஆய்வு செய்து, அந்த வட்டாரத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்ப நிதியை செலவு செய்து கொள்ளலாம். இதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம். முன்னேறிய வட்டாரங்களின் நிலைக்கு எல்லா வட்டாரங்களையும் 2 ஆண்டுகளில் கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

முன்பு பொதுவான திட்டங்கள் தான் இருந்தது. மாநில அளவில், தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இப்போது எங்கெங்கு என்னென்ன தேவை என்பதை குறிப்பாக அடையாளம் கண்டு, அதனை முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். உதாரணத்துக்கு பெரம்பலூர் மாவட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி நிலையில் இருக்கும். அங்கு கல்வியில் இலக்கு வைத்து செயல்பட்ட காரணத்தால், தற்போது தேர்வு முடிவுகளில் முதல் நான்கைந்து இடங்களில் பெரம்பலூர் மாவட்டம் இருக்கிறது. அதுபோல வட்டார அளவில் இன்னும் துல்லிய இலக்கோடு செயல்பட்டால் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரமுடியும் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம்.

கேள்வி: அடிப்படை கட்டமைப்பு ரீதியில் எந்த குறைபாடும் இல்லாத வகையில் கொண்டு வர இந்த திட்டங்கள் உதவலாம். நிலவியல் ரீதியாகவே பெரிய அளவில் வளர்ச்சியை கொண்டு வர முடியாத மாவட்டங்களில் என்ன செய்ய முடியும்?

ஜெயரஞ்சன்: நீர்வளம் குறைவான பகுதிகளில், ஒரு மாற்றி வழி இருக்கிறது. நீர்வளம் தேவையற்ற தொழில்களை அங்கு ஊக்குவிக்கலாம். விருதுநகரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது. அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நிலம் அதிகமாக கிடைக்கும். தொழிலாளர்களும் அதிகளவில் இருப்பார்கள். நிறைய தேசிய நெடுஞ்சாலைகளும் அங்கு கனெக்ட் ஆகின்றன

தூத்துக்குடி விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான இறக்குமதி, ஏற்றுமதி சரக்குகளும் இங்கு வரும். அப்படி இருக்கும்போது, அதனையொட்டி சாலை போக்குவரத்தை சார்ந்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அப்படி மாறும்போது சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளின் சாலை போக்குவரத்து வசதிகள் காரணமாக பார்வையைப் பெறும்.

ஜவுளித்துறை கேந்திரம்: திருப்பூர் ஜவுளித்துறையின் கேந்திரமாக இருக்கும் நிலையில், அவர்கள் வேறு பகுதிகளுக்கும் வர விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றபடி ஆலோசித்து மாற்றி வருகிறோம். வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசித்து, பிளான்களை செய்து வருகிறோம். ஏற்கனவே, மானாமதுரை, மன்னார்குடி, தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் ஜவுளித்துறை ஆலைகளை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இப்போது தோல் அற்ற காலணிகள் பயன்பாடு உலகளாவிய அளவில் வெகுவாக அதிகரித்துள்ளது. இன்றைக்கு பெரும்பாலானோர் non-leather காலணிகளை அணிகின்றனர். அதன் விலை பல ஆயிரங்கள் வரை கூட உள்ளது. அதுபோன்ற காலணிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. செய்யாறில் மிகப்பெரிய அளவில் தைவான் நாட்டு நிறுவனம் அதுபோன்ற ஆலையை தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலேயே 20 ஆயிரம் பேர் வரை அங்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தென் தமிழ்நாட்டில்: முன்பு தென் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் அதிகம் நடக்கும்போது, குழு அமைத்து ஆய்வு செய்ததில் முக்கியமான பரிந்துரை, அங்கு தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் கங்கைகொண்டான் தொழிற்பேட்டை. ஆனால், அங்கு யாரும் வரத் தயாராக இல்லை. நாங்குநேரியில் அதேபோல பயன்பாடற்று உள்ளது. அதனை மீட்டுருவாக்கி செயல்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+