Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: கோரமண்டல் ரயிலின் எச்சரிக்கை பிளாஷ் லைட்டை டிரைவர் ஆன் செய்வதற்குள் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ரயில் தடம்புரண்டு கிடந்த போது மற்றொரு ரயில் தடுத்து நிறுத்தப்படாதது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிஸாவில் ரயில் விபத்தில் 288 பேர் பலியாகிவிட்டனர். இதில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர். இந்த விபத்து குறித்து ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இது போல் ஒரே நேரத்தில் இத்தனை ரயில்கள் மோதி கொண்டது மிகவும் அரிதான ஒன்று. கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. அது கொல்கத்தாவுக்கு செல்லும் மற்றொரு ரயில் மீது மோதியுள்ளது.

 Exclusive: What happens in Odisha train crash incident?

மேலும் அந்த இடத்தில் ஒரு சரக்கு ரயிலும் நின்றுக் கொண்டிருந்தது. இப்படித்தான் இந்த விபத்தில் 3 ரயில்களும் இணைந்தன. ஆனால் கோரமண்டல் ரயில் எப்படி தடம் புரண்டது என்பதற்கான முகாந்திரம் என்ன என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தில் பிரச்சினையா, சிக்னலில் பிரச்சினையா எதில் பிரச்சினை என்பது தெரியவில்லை.

கோரமண்டல் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதுமே மற்றொரு எக்ஸ்பிரஸ் வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் ஒரு ரயில் தடம்புரண்ட போது அடுத்த ரயிலுக்கு ஏன் எந்தவித முன்னறிவிப்புகளையும் கொடுக்கவில்லை என கேட்கிறீர்கள். பொதுவாக ரயில்களில் பிளாஷ் லைட் என்பது என்ஜினில் இருக்கும். ஒரு ரயில் தடம்புரண்டதுமே என்ஜினில் இருக்கும் அந்த ஆட்டோ பிளாஷ் லைட் எரியத் தொடங்கிவிடும்.

அதை பார்த்ததுமே மற்றொரு ரயில் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளலாம். இந்த விபத்தை பொருத்தமட்டில் பிளாஷ் லைட் எரிந்து அதன்மூலம் தெரிந்து கொள்வதற்கான நேரமே இல்லை. இரு ரயில்களுமே அதி வேகத்தில் வந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் இந்த ரயில் தடம்புரண்டதுமே பிளாஷ் லைட்டை டிரைவர் ஆன் செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் அந்த லைட்டை ஆன் செய்வதற்குள்ளேயே மற்றொரு ரயில் அதே வேகத்தில் வந்துவிட்டது.

எனவே இந்த பிளாஷ் லைட்டை ஆன் செய்வதற்கான சாத்தியகூறுகள் இல்லை. இது போன்ற விபத்து நேரங்களில் மனிதர்களே இந்த லைட்டை ஆன் செய்வதற்கு முன்பு அதுவாகவே தானியங்கியாக எரியும் அளவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கவச் என சொல்லப்படும் ரயில்கள் மோதலை தடுக்கும் கருவியை நிறுவி மத்திய அமைச்சர் ஒரு ரயிலில் பயணம் செய்தும் பார்த்தார்.

அது மாதிரி கவாச் கருவி இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருக்கிறதா என தெரியவில்லை. கவாச் கருவி இருந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு ரயில் விபத்து ஏற்பட்டால் அந்த டிராக்கில் பயணிக்கும் மற்றொரு ரயிலுக்கு முந்தைய ரயில் நிலையத்திலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும். தடுத்து நிறுத்தப்படும். ஒரு வேளை அதற்குள் அந்த ரயில் அந்த ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டுவிட்டிருந்தாலும் வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மின்சாரத்தை துண்டித்திருக்கலாம். இதனால் அந்த ரயிலால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். எமர்ஜென்சி பிரேக்கை ரயில் ஓட்டுநர் பிரஸ் செய்ததுதான் அடுத்த ரயிலின் விபத்திற்கு காரணம் என சொல்கிறார்கள். அப்படி எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினால் தடம்புரண்டு செல்லாது. ஆனால் அதற்கெல்லாம் நேரமே இல்லை. எல்லாம் 5 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது.

எனவே ஒரு ரயில் விபத்துக்குள்ளாகியிருக்கும் போது அதை அதே டிராக்கில் வரும் டிரைவர் பார்த்தாலும் அவரால் ரயிலை நிறுத்த முடியாது. 100 கி.மீ. வேகத்தில் வரும் போது பிரேக் பிடிக்க ஒரு 800 மீட்டர் தொலைவாவது தேவைப்படும். ஆனால் இந்த விபத்தில் 120 கி.மீ. வேகத்தில் ரயில்கள் வந்து கொண்டிருந்துள்ளன. ரயில் தடம்புரண்டு செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் முக்கியமானது தண்டவாளத்தில் குறைபாடு இருந்தாலோ விரிசல் இருந்தாலோ தடம் புரள வாய்ப்பிருக்கிறது. பெட்டிகளில் குறைபாடு இருந்தாலும் தடம் புரளும். அது போல் ஒரு இடத்தில் 20 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் ஒரு ரயில் 30 கி.மீ. வேகத்தில் சென்றாலும் தடம்புரள வாய்ப்பிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டையில் திடீரென பாறை உருண்டு டிராக்கில் விழுந்தது. அப்போது டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் அப்ளை செய்து அதிக சேதம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

நேராக டிராக்கில் செல்லும் போது பாறைகள் விழுந்திருந்தால் டிரைவரால் பார்க்க முடியும். ஆனால் மலை பாதைகளில் வளைவுகளில் விழுந்திருந்தால் நம்மால் பார்க்க முடியாது. வேகம் அதிகரிக்கும் போது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்க வேண்டும். மனிதர்களாக எதையும் இயக்காமல் தானாக அதுவே இயங்கும் அளவுக்கு பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும். இந்த விபத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்பட்டால்தான் விபத்து குறித்து உண்மையான காரணம் தெரியவரும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+