Exclusive: எது அரசியல்.. திமுக, அதிமுகவை ஒரே பதிலில் காலி செய்த மயில்சாமி.. பரபர பேட்டி
சென்னை :சமூகம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தயங்காமல் குரல் கொடுக்கக்கூடியவர் நடிகர் மயில்சாமி. இவர் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைத்தோம். அதற்கு அவரது பதில்களை இப்போது பார்ப்போம்.
Recommended Video
வணக்கம் சார், விருகம்பாக்கம் தொகுதியில் தனித்து போட்டியிடுகிறீர்களே. உங்களை எந்த கட்சியும் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கவில்லையா?
எனக்கு எந்த கட்சியிலும் சேரும் விருப்பமும் இல்லை. நானே யோசனை செய்து பார்த்தேன். எந்த கட்சி நல்ல கட்சி, எதில் சேரலாம் என்று சில நாள் யோசித்து பார்த்தேன். சில கட்சியிடமும் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் சேரவில்லை. ஏனெனில் நமக்கு ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். அவரை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்கும் எண்ணம் இல்லை. அந்த காரணத்திற்ககாத்தான் எந்த கட்சியிலும் நான் சேரவில்லை.

ரசிகனை விரும்பியவர்
எம்ஜிஆர் மீது இவ்வளவு பற்று வர என்ன காரணம்?
எம்ஜிஆர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் முதலில் ரசிகனை பற்றித்தான் நினைப்பாராம். ஒரு நாள் என்ன செய்தார் என்றால், எல்லா தயாரிப்பாளரையும், டிஸ்ட்ரிபியூட்டர்களையும் கூப்பிட்டாராம். என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியில் செல்கிறார்கள். அங்கு எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார் ஒன்றுமில்லை. நான் 50 ஆயிரம் சம்பளத்தை ஏற்ற விரும்புகிறேன், உங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நீங்கள் பெரிய உயரத்தில் இருக்கிறீர்கள். அத்துடன் உங்கள் சம்பளம் நீங்கள் ஏற்றுகிறீர்கள். இதில் என்ன தலைவரே என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு எம்ஜிஆர், என் ரசிகர்கள் எல்லாம் கூலி தொழிலாளர்கள், நான் சம்பளம் ஏற்றியதற்காக நீங்கள் டிக்கெட் விலையை ஏற்றிவிடுவீர்கள். இதனால் படம் பார்க்க வரும் ரசிகன் பார்க்க முடியாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். சம்பளத்தை ஏற்று ரசிகரை பற்றியே எல்லா நேரமும் நினைக்கக்கூடியவர் எம்ஜிஆர் என்றார்.

மக்கள் கையில் முடிவு
விருகம்பாக்கம் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு என்பது மக்களிடம் தான் இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் பணியாற்றுவேன். இல்லாவிட்டால் எப்போதும் போல் இப்போது இருக்கிற மயில்சாமியாகவே இருப்பேன். வெற்றி வாய்ப்பு என்பது விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கே தெரியும். என்னை பற்றி 129ம் வார்டு மக்களுக்கு தெரியும். நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது தெரியும். மக்கள் முடிவு செய்தால் செருப்பு தைப்பவரை கூட வெல்ல வாய்ப்பார்கள். முதல்வரை கூட தோற்கவைப்பார்கள். மக்களை நம்புகிறேன். யார் யாரோ கூட்டணி வைக்க முயற்சித்திருப்பார்கள். கூட்டணி சேர விரும்பியிருப்பார்கள். நான் மக்களை விரும்புகிறேன், அவர்களை நம்புகிறேன் என்றார்.

விவேக் சார் பாராட்டினார்
உங்களுக்கு ஏன் மயில்சாமி இந்தவேலை என்று நீங்கள் போட்டியிடுவதை யாரும் விமர்சித்துள்ளார்களா?
இல்லை, யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் எனக்கு நல்ல பாராட்டுக்களை தெரிவித்தனர். விவேக் சார் சொன்னார். நல்ல சாய்ஸ், நல்ல ஒர்க் பண்ணுவ. நான் உன்னை வாழ்த்துகிறேன் நீ நல்லா பண்ணுவ என்றார். சுயேட்சையாக நிற்பதால் கட்சியினர் சிலர் நம்மை விமர்சிப்பார்கள். ஆனால் பொதுமக்கள் யாருமே என்னை கமெண்ட் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் அதிகம் செல்லக்கூடிய கோவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.நீங்கள் திருவண்ணாமலையில் போட்டியிட்டிருக்கலாமே..
அங்கு ஒரே ஹீரோ அண்ணாமலையார் மட்டுமே. மற்றவர்கள் கட்சியாக இருக்கலாம். ஹீரோ அண்ணாமலையார் மட்டுமே.
எது அரசியல்
திமுக, அதிமுக அறிக்கைகள் குறித்து உங்கள் ஓப்பீடு என்ன?
ஜெயிச்சபிறகு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நல்லது செய்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஜெயிக்கிறதுக்காக போட்டி போட்டு அறிக்கை விடுவது என்பது எப்படிப்பட்டது என்பது பொதுமக்களுக்கு தெரியும். கொடுப்பதெல்லாம் கொடுங்க. வாங்குறதெல்லாம் வாங்குவோம்.. ஆனால் ஓட்டுமட்டும் எங்கள் விருப்பம் என்பதே மக்களின் நிலைப்பாடு.நல்ல வேட்பாளர்கள் கண்டிப்பாக வெல்வார்கள். கட்சிகளில் சீட் கிடைக்கவில்லை என்றால் இன்னொரு கட்சிக்கு போய், ஏற்கனவே இருந்த கட்சியை குறை சொல்லக்கூடாது. அது அரசியல அல்ல. என் அரசியல் என்பது , நின்று ஜெயித்த பின்னர், மக்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வது தான் அரசிய்ல..
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications