காரைக்குடியில் ஜெயிக்கப் போவது.. "அவர்" இல்லையாம்.. "இவர்"தானாம்.. தந்தி டிவி பலே கணிப்பு!
சென்னை: காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு தோல்வி முகம் இருக்கும் என தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Recommended Video
தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில் தந்தி டிவி வெளியிட்ட தொகுதிவாரியான கருத்துக் கணிப்பில் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் யார் வெல்ல போவது என்பது குறித்து தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி
காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாங்குடி என்பவர் போட்டியிட்டார். இவர்களில் பாஜகவின் எச் ராஜாவின் வெற்றி வாய்ப்பு குறித்து மிகவும் எதிர்பார்ப்பு எழுந்தது.

மாங்குடி
இந்த நிலையில் இந்த தொகுதியில் எச் ராஜாவுக்கு தோல்விக்கே வாய்ப்பு என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாங்குடியே வெல்வார் என தெரிகிறது.

கார்த்தி சிதம்பரம்
நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே வென்றார்.

பாஜக
அது போல் 2001-ஆம் ஆண்டு காரைக்குடியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச் ராஜா வென்றுள்ளார். அதன் பிறகு 2006 இல் பாஜக சார்பில் ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2016இல் தி நகரில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு முறை கூட எச் ராஜா வெல்லவில்லை. தமிழக சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு 2017 இல் போட்டியிட்ட எச் ராஜாவுக்கு தோல்வியே கிடைத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications