Exit poll 2021: தமிழகத்தில் வடக்கு தொடங்கி தெற்கு மண்டலம் வரை.. திமுகவின் கோட்டையாகும்?
சென்னை: தமிழகத்தில் வடக்கு, மேற்கு, தெற்கு, காவிரி டெல்சா உள்ளிட்ட பகுதிகளில் திமுகவே பெரும்பாலான இடங்களில் வெல்லும் என இந்தியா டுடே சி வோட்டரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
Recommended Video
தமிழகத்தில் தேர்தல் என்றால் மண்டல வாரியாக பிரிக்கப்படும் போது வடதமிழகம், மேற்கு தமிழகம், தென் தமிழகம், காவிரி டெல்டா மற்றும் சென்னை என பிரிக்கப்படுகிறது.
இந்த 5 மண்டலங்களில் திமுகவே பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

மேற்கு தமிழகம்
தமிழகத்தில் மேற்கு பகுதியில் மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக 19 தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே சி வோட்டர் கணித்துள்ளது. அது போல் திமுகவுக்கு 43 சதவீதம் வாக்குகளும் அதிமுகவுக்கு 41 சதவீத வாக்குகளும் அமமுகவுக்கு 2 சதவீத வாக்குகளும் மநீமவுக்கு 4 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 10 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தென் தமிழகம்
தென் தமிழகத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் திமுக கூட்டணி 41 இடங்களிலும் அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் அமமுக ஒரு இடத்திலும் மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும். மக்கள் நீதி மய்யம் தென் தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெல்லாது என கணிக்கப்பட்டுள்ளது. அது போல் திமுகவுக்கு 42 சதவீதம் வாக்குகளும் அதிமுகவுக்கு 34 சதவீத வாக்குகளும் அமமுகவுக்கு 7 சதவீத வாக்குகளும் மநீமவுக்கு 4 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 13 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி டெல்டா
காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 41 தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக 37 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லுமாம். அமமுக, மநீம, மற்ற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெல்லாது என்கிறது இந்த கணிப்பு. அது போல் திமுகவுக்கு 50 சதவீதம் வாக்குகளும் அதிமுகவுக்கு 34 சதவீத வாக்குகளும் அமமுகவுக்கு 3 சதவீத வாக்குகளும் மநீமவுக்கு 4 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வட தமிழகம்
வடதமிழகத்தில் மொத்தம் 41 தொகுதிகள் உள்ளன. திமுக 33 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் வெல்லும். அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஒரு இடத்திலும் வெல்லாது என்கிறது கணிப்பு. அது போல் அது போல் திமுகவுக்கு 48 சதவீதம் வாக்குகளும் அதிமுகவுக்கு 38 சதவீத வாக்குகளும் அமமுகவுக்கு 2 சதவீத வாக்குகளும் மநீமவுக்கு 3 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications