டீ போட்டு.. பைக் ஓட்டி.. குழந்தையை கிள்ளி.. வீணாகிடுமோ.. ஆயிரம்விளக்கில் குஷ்புவுக்கு தோல்வி முகம்?
சென்னை: சென்னைக்கு மாவட்டத்திற்குள்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்புவுக்கு தோல்வியே கிடைக்கும் என தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகள் என்றாலும் அதில் ஒரு சில தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும். பாஜக சார்பில் குஷ்புவுக்கு சேப்பாக்கமா இல்லை ஆயிரம்விளக்கு தொகுதியா என எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில் குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து உற்சாகத்துடன் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதி வீதியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் குஷ்பு.

தேர்தல்
இது மட்டுமல்லாமல் குஷ்புவை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தனது வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் குறித்து பிரச்சாரத்தில் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார் குஷ்பு. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கதுத்து கணிப்புகள் வெளியாகின.

தந்தி டிவி கருத்து கணிப்புகள்
இதில் தந்தி டிவி எடுத்த கருத்து கணிப்பில் நடிகை குஷ்புவுக்கு ஆயிரம்விளக்கு தொகுதியில் தோல்வி கிடைக்கும் என்றும் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட டாக்டர் நா எழிலன் வெல்வார் என்றும் வெளியாகியுள்ளது. ஆயிரம்விளக்கு தொகுதி திமுகவின் கோட்டையாக சொல்லப்பட்டாலும் நா எழிலனுக்கும் அத்தொகுதியில் நற்பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ்- பாஜக
திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்து பின்னர் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற குஷ்புவுக்கு கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே சீட்டு வழங்கப்பட்டது. இதனால் உற்சாகத்தில் இருந்த குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து கடுமையாக உழைத்தார்.

ரசிகர்கள்
திடீரென ஒரு வீட்டுக்கு சென்று டீ போட்டு கொடுத்தார். பின்னர் தனது உறவின பெண்ணிடம் பைக் வாங்கி பேரணி நடத்தினார். தான் அந்த தொகுதியின் பெண் என கூறி வந்தார். பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு குழந்தையையும் கிள்ளி விளையாடுவார். இத்தனை செய்தும் கருத்து கணிப்பு முடிவுகள் அவருக்கு எதிராகவே வந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications