சொல்லி அடித்த Axis My India.. 5 மாநில Exit poll தேர்தல் கணிப்பும் உண்மையான ரிசல்ட்டும்.. ஒப்பீடு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனம். இது சாத்தியமா என கேள்விகள் எழுந்திருந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகளில் அந்தக் கணிப்பு பலித்துள்ளது. ஆக்சிஸ் - மை இந்தியா வெளியிட்ட எக்சிட் போல் கணிப்புகள், மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் எப்படி மேட்ச் ஆகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்புகளை வெளியிட்ட 4 மாநிலங்களிலுமே அதன் கணிப்பு, இன்று வெளியான தேர்தல் முடிவுகளோடு கிட்டத்தட்ட துல்லியமாகப் பொருந்தி இருக்கிறது.

தமிழ்நாடு
விஜய்யின் தமிழக வெற்றி கழகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு எதிர்பாராத வெற்றியைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யக்கூடும் என்று ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கருத்துக் கணிப்பு கணித்திருந்தது. தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவெக: 98 - 120 இடங்கள்
திமுக: 92 - 110 இடங்கள்
அதிமுக பாஜக கூட்டணி: 22 - 23 இடங்கள்
இன்றைய ரிசல்ட்
தவெக: 107 இடங்கள்
திமுக: 74 இடங்கள்
அதிமுக, பாஜக கூட்டணி: 53 இடங்கள்
கேரளா:
கேரளாவின் 140 தொகுதிகளுக்கான ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, இடது ஜனநாயக முன்னணி (LDF) 78 முதல் 90 இடங்கள் வரையிலும், 44 சதவீத வாக்குப் பங்கீட்டுடனும் ஆட்சிக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது.
இடது ஜனநாயக முன்னணி: 49 முதல் 62 இடங்கள்
காங்கிரஸ்: 78 -90 இடங்கள்
என்.டி.ஏ கூட்டணி: 3 இடங்கள் வரை
கேரளா - இன்றைய ரிசல்ட்
இடது ஜனநாயக முன்னணி: 35 இடங்கள்
காங்கிரஸ்: 103 இடங்கள்
என்.டி.ஏ கூட்டணி: 3 இடங்கள்
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தக்கவைத்துக் கொள்ளும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுகவை உள்ளடக்கிய இந்தக் கூட்டணி, 30 சட்டமன்றத் தொகுதிகளில் 16 முதல் 20 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 16 - 20 இடங்கள்
காங்கிரஸ்-திமுக கூட்டணி: 6 முதல் 8 இடங்கள்
தவெக: 2 - 4 இடங்கள்
புதுச்சேரியில் இன்றைய ரிசல்ட்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 18இடங்கள்
காங்கிரஸ் - திமுக கூட்டணி: 6 இடங்கள்
தவெக: 2 இடங்கள்
அசாம்
ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக்கணிப்பின்படி, அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
மொத்த இடங்கள்: 126
NDA கூட்டணி (BJP+AGP+BPF): 88 - 100 இடங்கள்
பாஜக மட்டும்: 70 - 80 இடங்கள்
அசாம் கண பரிஷத்: 7 முதல் 9 இடங்கள்
BPF: 9 முதல் 11 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி: 24 - 36 இடங்கள்
அசாம் - இன்றைய ரிசல்ட்
NDA கூட்டணி (BJP+AGP+BPF): 102 இடங்கள்
பாஜக மட்டும்: 82 இடங்கள்
அசாம் கண பரிஷத்: 10
BPF: 10
காங்கிரஸ் கூட்டணி: 23 இடங்கள்
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் எக்சிட் போல் ரிசல்ட்டை வெளியிடவில்லை. துல்லியமான புள்ளி விவரங்களை எட்ட முடியவில்லை என்பதால் கணிப்பை வெளியிடவில்லை எனத் தெரிவித்திருந்தது.
அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட கள ஆய்வாளர்களைக் கொண்டு விரிவான கணக்கெடுப்புகளை நடத்தினோம். ஆனால், ஆய்வில் பங்கேற்ற வாக்காளர்களில் சுமார் 70 சதவீதத்தினர் தங்களின் அரசியல் விருப்பத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்த முன்வரவில்லை. வாக்காளர்களின் இந்த அமைதி காரணமாக, துல்லியமான புள்ளிவிவரங்களை எட்ட முடியவில்லை. தவறான முடிவுகளை வழங்குவதைத் தவிர்க்கவே, இந்த முறை கருத்துக்கணிப்பு முடிவுகளை நிறுத்தி வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
இன்றைய ரிசல்ட்
பாஜக: 207 சீட்
திரிணாமுல் காங்கிரஸ்: 80 சீட்
காங்கிரஸ்: 2 சீட்
ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்புகளை வெளியிட்ட 4 மாநிலங்களிலுமே அதன் கணிப்பு கிட்டத்தட்ட துல்லியமாகப் பொருந்தி இருக்கிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications