தவெகவுக்கு ‘டபுள் டிஜிட்’ தொகுதிகள் கன்பார்ம்? எக்சிட் போல் கணிப்புகள் சொல்வது என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தவெக எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதே அனைவரும் அறியக் காத்திருக்கும் செய்தி. இன்று எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள், தவெக டபுள் டிஜிட்டில் சீட்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்தியாவின் பல்வேறு முன்னணி தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக விஜய்
சினிமா புகழ் மூலமாக தவெக-வைத் தொடங்கிய விஜய் முதல் முறையாக இந்த தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். விஜய், தான் போட்டியிடும் முதல் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்? அவர் அரசியல் வாழ்வு எப்படி அமையப்போகிறது? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் அவர் மீது இருந்து வருகிறது.
அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜய் இந்த தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அதையே உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் தவெக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறக்கூடும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தவெக எவ்வளவு சீட் ஜெயிக்கும்?
என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளை தமிழ்நாட்டில் கைப்பற்றும், மேட்ரிஸ் தவெக 12 முதல் 16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ரிபப்ளிக் - பி மார்க் தவெக 16 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்ட் 13 முதல் 18 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணித்துள்ளனர். டைம்ஸ் நவ் மற்றும் ஜேவிசி தவெக 8 முதல் 15 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
அக்னி நியூஸ் சர்வீசஸ், தவெக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்றும், வோட் வைப் (vote vibe) தவெக 4 - 10 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் என்றும், மின்னம்பலம் எக்சிட் போல் தவெக 5 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் கணித்துள்ளது.
தவெக ஆட்சி?
உச்சபட்சமாக, ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல், தவெக ஆட்சி அமைக்கக்கூடும் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெல்லக்கூடும் என்றும், திமுக 92 - 110 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், அதிமுக வெறும் 22 - 33 சீட்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் தெரிவித்துள்ளது.
விஜய்க்கு பெரும்பாலான முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்களித்துள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், முதியவர்கள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
-
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி!












Click it and Unblock the Notifications