வந்த அறிவிப்பு! மொத்தமாக இனி ரூ.1000 அல்ல! வங்கி கணக்கில் தமிழக அரசு தரும் ரூ.3000! எப்படி பெறுவது
சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 3000 உங்க வங்கி கணக்கில் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது போக புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே விரிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது.

1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர்.
மீதம் 2000 பெறுவது எப்படி?: உங்கள் வீட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி ரூபாய் 3000 மொத்தமாக வரும். அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன. இதற்கு ஆதார் கார்டு தேவை , வங்கி கணக்கு விவரங்கள் தேவை.
புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பணம்; இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம்" திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications