Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த சிக்ஸர்.. ஒருபக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுவில் பாஜக.. திமுக அதிரடி ஸ்கெட்ச்!

பிடிஆரும், ஜெயரஞ்சனும் செயல்பட போவதை ஆர்வத்துடன் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி தமிழ்நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களை பற்றி கவலையே பட வேண்டாம்.. அதை அந்த 2 பேரும் கவனித்து கொள்வார்கள் என்ற புது நம்பிக்கை பிறந்துள்ளது.. ஒருவர் பிடிஆர்.. இன்னொருவர் ஜெயரஞ்சன்..!

Recommended Video

    ஒருபக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுவில் பாஜக.. திமுக அதிரடி ஸ்கெட்ச்!

    கடந்த சில தினங்களாக நிதியமைச்சர் பிடிஆர் தந்து வரும் பேட்டிகள், சொல்லும் கருத்துகள், ட்வீட்கள், போன்றவற்றின் மீது சில அதிருப்திகள் இருக்கின்றன..

    அமைச்சர் கடுமையாக பேசுகிறார்.. வார்த்தைகளில் கவனம் இல்லாமல் பேசுகிறார்.. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் என்று சொல்லப்படுகிறது.

    திமுக

    திமுக

    ஆனாலும், அவர் சொல்ல வரும் விஷயம் என்ன என்பதில்தான் பெரும்பாலானோரின் கவனம் குவிகிறது.. நியாயமாக பேசுகிறாரா? நியாயமாக கேள்வி கேட்கிறாரா? என்பதைதான் அதிகமாக உற்றுநோக்குகிறார்கள்.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும் விலாவரியாக பிடிஆர் பேசுவார் என்று பாஜக மேலிடம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காது.. புள்ளி விவரங்களுடன் பாயின்ட் பாயிண்ட்டாக பேசுவதை பார்த்து நிர்மலா சீதாராமனே கொஞ்சம் அதிர்ந்துபோனார்.

    வானதி

    வானதி

    இதனிடையே, எச்.ராஜா ஈஷா விவகாரத்தை பேற்றி பேசவும், அதை வைத்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கவும், வெறிப்பிடிச்ச நாய் குரைப்பதற்கெல்லாம் தன்னால் பதில்கூறமுடியாது என்று நறுக் பதிலை பிடிஆர் சொன்னது யாருமே எதிர்பாராத ஒன்று.. இதற்கு பிறகு வானதி சீனிவாசன் ஜிஎஸ்டி கவுன்சில் பற்றி பேச, எரிச்சலடைந்த பிடிஆர், வானதியை டிவிட்டர் பக்கத்தில் இருந்து பிளாக் செய்து நோஸ்கட் தந்தார்.

     ஆச்சரியம்

    ஆச்சரியம்

    இதெல்லாம் ஆச்சரியத்துடன் மக்கள் போர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில்தான் ஜெயரஞ்சனை திட்டக்குழு செயல்குழு துணை தலைவராக அறிவித்தார் முக ஸ்டாலின்.. ஜிஎஸ்டி, சென்செக்ஸ் போன்ற புரியாத வார்த்தைகளை கடந்தும் நகர்ந்தும் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், எளிய முறையில் பொருளாதாரத்தை புரிய வைத்தவர்..!

    அவசியம்

    அவசியம்

    விவசாயம் உயர்ந்தால்தான், கிராமப்புற பொருளாதாரம் உயரும் என்பதை வலியுறுத்தியவர்.. அரை மணி நேரமே டிவி விவாதத்தில் பேசினாலும், தன் பேச்சில் மக்களை ஈர்த்தவர்.. நம் நாட்டின் பொருளாதாரத்தின் அவசியத்தை, ஒவ்வொரு கடைகோடி கிராமப்புறங்களுக்கும் கொண்டு போய் சேர்த்தவர்.

     பொருளாதாரம்

    பொருளாதாரம்

    அத்துடன், மக்களுக்கு பலனளிக்காத பாஜகவின் அறிவிப்பு, திட்டங்களை சரமாரியாக விமர்சித்தவர்.. குறிப்பாக, "இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட கொரோனா மட்டுமே காரணமல்ல.. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது" என்று துணிந்து சொன்னவர்.

    ஆக்சிஜன்

    ஆக்சிஜன்

    "கொரோனாவை எதிர்கொள்ள சீரான நடவடிக்கைகள் எதுவுமில்லை.. பெட் இல்லை.. ஆக்சிஜன் இல்லை. ஆம்புலன்ஸ் இல்லை... இதில் செத்தா எரிப்பதற்கு சுடுகாடு கூட இல்லை.." என்று குற்றஞ்சாட்டியவர். அதுமட்டுமில்லை.. "அதென்ன ஒன்றியம்? நாம தனி.. நாமதான் அவங்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.. நாம தேர்ந்தெடுத்தவர்கள், நம்மை புறக்கணிக்கிறார்களே? மத்திய அரசுன்னு ஒன்னு தனியா கிடையாது.. நாமெல்லாம் சேர்ந்ததுதான் மத்திய அரசு.." என்று தெளிவுபடுத்துவார்.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    ஜெயரஞ்சனின் இந்த பேச்சைதான் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.. அதுமட்டுமல்ல, ஜெயரஞ்சன் எடுத்துரைக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சாமான்ய மக்களின் மனசாக ஒலித்தது.. இந்தியாவிலேயே ஜிஎஸ்டி உற்பத்தி செய்வதில் தமிழ்நாடுதான் அதிகம்.. முதலாளி - தொழிலாளி என அனைவரும் சேர்ந்துதான் இந்த உற்பத்தியை பெருக்குகிறார்கள்..

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியத்துவத்தை மத்திய அரசு தருவதில்லை என்று கேள்வி எழுப்பியவர் ஜெயரஞ்சன்.. உற்பத்தி அதிகம் என்று வைத்து கொண்டாலும் தமிழ்நாடுதான் முதன்மையாக வரும்.. பெரிய மாநில என்று வைத்து கொண்டாலும் தமிழ்நாடுதான் அதிலும் வரும்.. அப்படி இருக்கும்போது, எங்களை விட்டுவிட்டு, கோவா மாதிரி இருக்கும் சின்ன சின்ன மாநிலத்துக்கு மத்திய அரசு ஏன் முக்கியத்துவம் தருகிறது?" என்ற அதிர கேள்வி எழுப்பியவர் ஜெயரஞ்சன்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வந்து சேரவில்லை... ஜிஎஸ்டி பணமும் வரவில்லை.. அந்த கோபத்தில் தமிழக மக்கள் உள்ளனர்.. "எங்களுக்கு தர வேண்டியதை தந்துதான் ஆகணும்" என்று கேட்பதற்கு இதுவரை தமிழ்நாட்டில் பொருத்தமானவர்கள் யாரும் இல்லாமல் இருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஜெயரஞ்சனின் நியமனம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.. "நம்ம பணம் எப்படியாவது இனி நமக்கு வந்துவிடும்" என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.. ஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன் என களத்தில் குதித்துள்ளதால், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் பாஜக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+