Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளி கட்டுக்கடங்காமல் உயருது.. ஒரு பார் சில்வராவது வாங்கி போடுங்க.. வல்லுநர் வெளியிட்ட கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச மற்றும் இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் காலங்களில் வெள்ளி விலை மேலும் உச்சத்தை அடையும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வெள்ளி, ஆரம்ப வர்த்தகத்திலேயே 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இன்று காலை 9:20 மணியளவில், MCX வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹2,04,445 ஆக 3.38 சதவீதம் அதிகரித்து, வாழ்நாள் உச்சத்தை எட்டியது. அமெரிக்காவின் பொருளாதார தரவுகள், வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை வெள்ளியின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

gold rate silver investment

வெள்ளி மட்டும் இவ்வளவு வேகமாக ஏன் முன்னேறுகிறது?

இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹222 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹2,22,000 ஆகவும் உள்ளது. தங்கம் பெரும்பாலும் ஒரே நிலையில் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், வெள்ளி மட்டும் இவ்வளவு வேகமாக ஏன் முன்னேறுகிறது? தற்போதைய உயர் விலையில் வாங்கலாமா என்ற முக்கிய கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சர்வதேச அளவிலும், வெள்ளியே முன்னிலை வகித்தது. அவுன்ஸ் ஸ்பாட் வெள்ளி 2.8 சதவீதம் உயர்ந்து $65.63 என்ற புதிய சாதனையை எட்டியது. இது முதல் முறையாக $65 என்ற வரம்பை கடந்தது. ஸ்பாட் தங்கம், அமெரிக்க டாலரின் பலவீனத்தால் ஆதரவு பெற்று, 0.4 சதவீதம் மட்டுமே உயர்ந்து அவுன்ஸுக்கு $4,321.56 ஆக இருந்தது.

வெள்ளி ஏன் தங்கத்தை மிஞ்சுகிறது?

இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக் குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+