சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கூல்டிரிங்ஸில் மது வாடை! பூஞ்சை பூத்த பாப்கார்ன்! கேன்டீன் லைசன்ஸ் ரத்து
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் கெட்டு போன குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அங்குள்ள கேன்டீன் உரிமையாளரின் லைசன்ஸை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் நித்யா. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளார். படத்தின் இடைவேளையின் போது தியேட்டரில் உள்ள கேன்டீனில் குளிர்பானம் வாங்கி தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

அப்போது அந்த குளிர்பானம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் வாய் வைத்து குடிக்கும் பகுதியில் அழுக்காக இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கேன்டீன் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறையினருக்கும் புகார் சென்றது.
மூடியை சுற்றி அழுக்கு
அப்போது நித்யா, சில குளிர்பான பாட்டில்கள் சுகாதாரமற்ற முறையிலும் அதிலிருந்து மது வாசனை வீசுவதாகவும் புகார் அளித்தார். விலை அதிகம் வாங்கிக் கொண்டு தரமற்ற பொருட்களை கொடுக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
எழும்பூர் போலீஸார்
இதுகுறித்து எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆல்பர்ட் தியேட்டர் கேன்டீன் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்தது. அதாவது, வாடிக்கையாளர் வாங்கிய குளிர்பானம் லிச்சி ஃபிளேவர், அது அப்படித்தான் வாசனை வரும். நாங்கள் தவறான பொருட்களை விற்பனை செய்திருந்தால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தாராளமாக எங்கள் கேன்டீனை ஆய்வு செய்யலாம் என தெரிவித்திருந்தனர்.
காலாவதியான பாப்கார்ன்கள்
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையில் அதிகாரிகள் குழு அதிரடியாக ஆல்பர்ட் திரையரங்கு கேன்டீனில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஸ்டோர் ரூமில் நவம்பர் மாதமே காலாவதியான கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், பாப்கார்ன்கள் இருந்தன.
கேன்டீன் உரிமையாளருக்கு லைசன்ஸ் ரத்து
அவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாப்கார்னில் பூஞ்சை படித்திருந்தது. இதையடுத்து இந்த தியேட்டரில் கேன்டீன் நடத்தும் உரிமையாளருக்கு ஓராண்டுக்கு லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், இந்த காலாவதியான பொருட்களை எல்லாம் ஸ்டோர் ரூமில் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்துவிட்டோம்.
ஸ்டோர் ரூமில் கூட வைக்கக் கூடாது
காலாவதியானதை ஸ்டோர் ரூமில் கூட வைக்கக் கூடாது. அவர்களாகவே அவற்றை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டால் இனி எல்லா ஜூஸ் கடைகள், பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய போகிறார்கள்.
எல்லா மால்களிலும் ரெய்டு
அது போல் எல்லா தியேட்டர்களிலும் மால்களில் உள்ள தியேட்டர்களிலும் உள்ள கேன்டீன்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தப் போகிறார்கள் என தெரிவித்திருந்தார். இது போல் உணவகங்களில் கூட கொள்ளை காசை வாங்கிக் கொண்டு சுகாதாரமற்ற பொருட்களையும் கரப்பான், பல்லி, எலி, ஈ, பூரான் விழுந்த உணவுகளையும் புழு பூத்த சிக்கன், மட்டன் உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள்.
பணமே குறி
ஒவ்வொரு முறையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு வந்து சுகாதாரமற்ற பொருட்களை அப்புறப்படுத்தினாலும் சிலர் மீண்டும் மீண்டும் பணத்தாசைக்காக இது போன்ற செயல்களில் இறங்குகிறார்கள். பொதுவிடமான தியேட்டரில் குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் என வருகிறார்கள். அவர்களுக்கு இது போன்று சுத்தம் இல்லாத உணவுகளை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. மேலும் வெளியே விற்பனையாகும் ரேட்டை விட அதிக ரேட்டுக்கு விற்கிறார்கள்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications