மீண்டும் தாம்பரத்தில் விரைவு ரயில்கள்.. எழும்​பூர் ரயில் நிலையத்தில் வரும் பெரிய மேம்பாலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் விசித்திரமான எக்ஸ்லேட்டர் எதுவுமே இல்லாத புத்திசாலித்தனமான மற்றும் அற்புதமான வடிவமைப்புடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தை கட்டினார்கள்.ஆனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அப்படி இருக்காது. இந்த சூழலில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், அதிநவீன வடிவமைப்புடன் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. எனவே விரைவு ரயில்​களை மீண்​டும் தாம்​பரத்​தில் இருந்து இயக்க ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் மிக பழமையான ரயில் நிலையம் ஆகும். சென்ட்ரல் ரயில் நிலையம் வடமாநிலம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு முக்கியம் என்றால், எழும்பூர் ரயில்நிலையம், தென்மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவிற்கு முக்கியமான ரயில் நிலையமாக இருக்கிறது. எனவே சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டது. அதற்காக ரூ.734.91 கோடி​யில் மறுசீரமைப்பு பணிகள், கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்கி படிப்படியாக நடந்து வருகிறது.

Express trains to operate from Tambaram again instead of Egmore railway station

மறுசீரமைப்பு பணிகள் நடந்தாலும், மக்களையும், ரயில் பயணிகளை பாதிக்காத அளவிற்கே பணிகள் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. எனினும் தண்டவாளப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும் போது மட்டும் நடைமேடைகளை மூட வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக அப்போது மட்டும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

தற்போது எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் முதல் 5 நடை மேடைகளை அகலப்​படுத்தி நவீனப்​படுத்​தும் பணி​கள் நடக்கிறது. இந்த பணிக்காக, தாம்​பரம் நிலை​யத்​துக்கு விரைவு ரயில்​கள் மாற்​றம் கடந்த ஆண்டு ஜூனில் தொடங்​கியது. இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த ஆண்டு செப்​டம்​பர், டிசம்​பரில் அடுத்​தடுத்த கட்​டங்​களாக மற்ற விரைவு ரயில்​களும் தாம்​பரம் முனை​யத்​துக்கு மாற்​றப்​பட்டிருந்தன.

இதன்​பிறகு, ரயில் நிலை​யத்​தின் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்​க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே பெரிய நடைமேம்​பாலம் அமைக்க முதல்​கட்ட பணி​கள் நடப்​பாண்​டில் பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. இதற்காக உழவன், அனந்​த​புரி, ராமேஸ்​வரம் போன்ற சில முக்​கிய விரைவு ரயில்​கள் பிப்​ரவரி 3-ம் தேதி முதல் ஏப்​ரல் 4-ம் தேதி வரை தாம்​பரம் நிலை​யத்​துக்கு தற்​காலிக​மாக மாற்​றப்​பட்டு அங்​கிருந்து இயக்​கப்​பட்​டன.

அதேபோல் புறநகர் மின்​சார ரயில்​கள் சேவை பிப்ரரி 20 முதல் ஏப்ரல் 3 வரை 43 நாட்​களுக்கு தற்​காலிக மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன்​பிறகு, முக்​கிய பணி​கள் முடிந்​த ​பிறகு, எழும்​பூர் நிலை​யத்​தில் இருந்து விரைவு ரயில்​களின் இயக்​கம் சீரானது. இந்​நிலை​யில், 3-ம் கட்​ட​மாக, இரும்பு நடைமேம்​பாலப் பணி​களுக்​காக, சில விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்ற முடிவு செய்​யப்​பட்​டிருக்கிறது.

நடைமேம்​பாலம் அமைக்க, 500 டன் எடைக்​கும் அதி​க​மான கிரேன்​கள் பயன்​படுத்​தப்​பட உள்ளது. அதன் மூலம் இரும்பு கர்​டர்​கள் நிறு​வப்​பட​ இருக்கிறது. இந்த நடைமேம்பாலம் 18 மீட்​டர் அகலத்​துட​னும், 120 மீட்​டர் நீளத்​துட​னும் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் எங்கு அமைகிறது என்றால், காந்தி இர்​வின் சாலை பகு​தி​யில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரை​யில் அமைக்​கப்பட உள்​ளது. அதேபோல் 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை​யில் இரும்பு நடைமேம்​பாலம் அமைக்​கும் பணியும் விரை​வில் தொடங்​க​ இருக்கிறது.

எனவே எழும்​பூரில் இருந்து இயக்​கப்​படும் விரைவு ரயில்​கள் மீண்​டும் தாம்​பரத்​துக்கு மாற்ற முடிவு செய்​யப்​பட்​டிருக்கிறது. இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறுகையில், "நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​யால், சில விரைவு ரயில்​களை தாம்​பரத்​துக்கு மாற்​று​வது தொடர்​பாக, தெற்கு ரயில்வே தலை​மையகத்​துக்கு பரிந்​துரை செய்​திருக்கிறோம். அனு​மதி கிடைத்த பிறகு மாற்​றம் செய்வோம் என்றார்.

இந்த மாற்​றம் விரை​வில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகறிது. பயணி​களுக்கு எவ்​வித தொந்​தரவு இல்​லாமல், ரயில்​ சேவையை மாற்​ற நடவடிக்​கை எடுக்​க தெற்கு ரயில்வே திட்டமிட்டள்ளது. மின்​சார ரயில்​களை 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்​கு​வது குறித்​து தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருகிறது. எத்தனை நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்பது குறித்து தகவல்கள் இல்லை. எனவே மீண்டும் சில வாரங்கள் ரயில் சேவை பெற எழும்பூர் போக வேண்டிய நிலை ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+