அடுத்த 12 மணி நேரம் கவனம்.. அதி தீவிர கனமழை பெய்யும்.. தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட்!
சென்னை: தூத்துக்குடியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி தீவிர மிககனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை சூடு பிடித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இன்று மாலை நேரத்தில் கனமழை பெய்தது. அதேபோல் தென் மாவட்டங்களிலும் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

மழை
இந்த நிலையில் தூத்துக்குடியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி தீவிர மிககனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மழை அதிகமாக இருக்கும். காற்று மிகவும் வேகமாக வீசும், இடி மின்னல் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

நாளை
நாளை காலை 8.30 மணி வரை அதி தீவிர மிக கனமழை பெய்யும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று எப்படி
நேற்றுதான் தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடியில் இன்று மாலை வரை மொத்தமாக 18 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.

வேறு எங்கு
தூத்துக்குடி மட்டுமின்றி கன்னியாகுமரி, நெல்லை போன்ற அண்டை மாவட்டங்களிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு வேகமாக காற்றும் வீசி வருவதால் இன்று பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால்.. மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications